ஹி ஹி நான் தான் சொன்னேனே

ஈ) கதை கேளு கதை கேளு

அது ஒரு உயர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரமான கட்டிடம்.

அங்கதான் நம்ம கதையின் நாயகன் தற்கொலை செய்துக்க போயிட்டிருந்தான். அவனுக்கு வயசு ஒரு பத்தொன்பது இல்ல இருபது இருக்குமா?.. இருக்கும்… இருக்கும்.

கருகருன்னு மீசை, அலை அலையா தலைமுடி, கண்ணுல சோகத்தையும் மீறின ஒரு குறுகுறுப்பு, வயதுக்கே உரிய ஒரு துடிப்பு.. இவன் ஏன் தற்கொலை செய்துக்கணும்??

புரியாத புதிரா இருக்கே.. ஒரு வேளை காதல் தோல்வியோ?.. இல்லை பரீட்சையில பெயில் ஆகிட்டானோ? ம்ம்.. சேச்சே இதெல்லாம் காரணமா இருக்காது.. வேற என்னவா இருக்கும்..ம்ம்

அடடா யோசிக்கிறதுக்குள்ள நம்ம கதாநாயகன் லிப்ட்ல ஏறி கட்டிடத்தின் உச்சிக்கு போயிட்டான் போல இருக்கே.. தடைசெய்யப்பட்ட பகுதியில யாரோ இருக்காங்கன்னு அலாரம் அடிக்குது..

ஆனாலும் இப்பல்லாம் தொழில்நுட்பம் ரொம்பவே முன்னேறிடுச்சி.. எவ்வளவு சீக்கிரம் உச்சிக்கு போயிட்டான்.. என்ன நடக்குதோ தெரியலை..

உச்சிக்கு வந்தாச்சு. இனி குதிச்சிட வேண்டியதுதான்.

வாட்ச்சைப் பார்த்தான் மணி 3:45 21/21/21

1..2..3…

இதென்ன எல்லா வீட்டுலயும் ஜன்னல் மூடி இருக்காங்க.. அடடா மழை பெய்யுது..

சே ஏன் இப்படி பனி பெய்யுதோ தெரியலையே உடம்பெல்லாம் ஜில்லுனு ஆகிடுச்சி..

அப்பாடி ஒரு வழியா வெயில் காலம் வந்துடுச்சி..

கை காலெல்லாம் தளர்ந்து போன மாதிரி இருக்கு

அடடா கண் பார்வைகூட மங்குது..

என்ன வருஷம் இது.. வாட்சை பார்த்தான் 3:47 21/21/71

அடடா அம்பது வருஷம் ஆகிடுச்சி.. இன்னும் தரையைக் காணோமே.. ஹ்ம்

வீழ்ந்துகொண்டே இருந்தான்

என்ன நடக்குதுன்னு உங்களுக்கும் புரியலையா

தலைப்பையும், முதல் வரியையும் படிங்க

17 thoughts on “ஹி ஹி நான் தான் சொன்னேனே”

  1. துபையில் புதிதாக கட்டப்படுகிற துபை வேர்ல்ட் டவர் (இங்கே புர்ஜ் டவர்- உலகத்திலே உயரமானதாக வரப் போகிறதாம்) சமீபத்தில் பார்க்கப் போனீங்களோ!

  2. எனிவே, உங்கட உயர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரமான கட்டிடத்தில 26 Floorதானே இருக்கு

  3. வாங்க கீதா ராம்குமார், சிபியண்ணே, சுல்தான், தமிழ்மகன்

    அது ஒரு உயரமான கட்டிடம்தான்.. அதுகு 26 floor அப்படிங்கற limit எல்லாம் கிடையாது… கதையை நல்லா படிச்சிங்கன்னா புரியும்..

    அந்த incident நடக்க போவது 21/21/21 – அதாவது ஒரு வருஷத்துக்கு 12 மாசங்கிறதெல்லாம் மாறிப்போன ஒரு கால கட்டத்துல.. வருங்காலத்துல எப்பவோ…

    அதெல்லாம் விட்டுட்டாலும் இங்க வந்து logic பார்க்கலாமா .. ஹிஹி

  4. ஆனாலும் தொழில்நுட்பம் ரொம்பத்தான் முன்னேறி இருக்கு! உச்சில இருந்து கீழே விழுந்து 50 வருஷம் ஆகியும் தரை வந்து சேராத அளவு உயர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரமான கட்டிடத்தின் உச்சிக்கு, கதாநாயகனை சின்ன யோசனை முடியும் முன் கொண்டு சேர்த்த தொழில் நுட்பம் அபாரம் தான்!

    இல்லை… அந்த தொழில்நுட்ப எதிர் காலத்தில் இயந்திர துணை இல்லாமல் மனிதன் மரிக்கவும் முடியாதா?

    இருந்தாலும் உங்க குறும்பு இருக்கே….. ம்ம்ம்ம் நல்லா இருக்கு!

  5. நல்ல நக்கல்தான் உங்களுக்கு. உங்களுக்கும் நிவேதானாவுக்கும் புது வருட வாழ்த்துக்கள்.எங்களையெல்லாம் மறந்துபோயிருப்பீங்க

  6. நீங்க சொல்றதப் பாதத, உங்க உயர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரமான கட்டிடத்தில இருந்து, கொஞ்சம் வேகமாக எம்பி குதித்தால் விண்வெளிக்கே போய்விடலாம் போல….

  7. //இன்னும் தரையைக் காணோமே.. ஹ்ம் வீழ்ந்துகொண்டே இருந்தான்//

    இந்த வருஷம் இந்நேரம் விண்வெளில எங்காவது பறந்துடே இருப்பானா,,, சாரி பறந்துடே இருப்பாரா அந்த முதியவர்…..

Leave a Reply to கீதா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *