மாற்றம்

அ) கவிதைகள்

காலமகள் கொடியசைப்பில்
கடந்தது பல ஆண்டு
அன்பு நட்பு பாசம் கொண்டு
கண்ட காட்சி கேட்ட சொற்கள்
இன்றும் உண்டு நெஞ்சில் இங்கு
அன்று கண்ட மக்கள் மட்டும்
காணவில்லை மாறிப்போனார்
காலச்சுழலில் வேறு ஆனார்
மாற்றம் மட்டும் உண்மையென்றால்
அன்பும்கூட பொய்மைதானோ?
பழைய வாசம் தேடும் மனதே
புரிந்துகொள்வாய் விழித்துக்கொள்வாய்
வாழும் காலம் வேறு காலம்.

4 thoughts on “மாற்றம்”

 1. veru kalathil vazlnthalum matrram kollamal pazamai vasam thedum ungalaip pol silar ullanare. thodarattum ungal ennanagal.
  tamilil elzutha enna seyyavendum. mudinthal therivikkavum.
  anbudan lalitha

 2. அன்பும் பொய்மை ஆவது…..காலத்தின் கோலமா?

  அருமையான வரிகள் கீதா, பாராட்டுக்கள்.

 3. miga miga arumaiyaana varikaL. theLivaaga siRantha theerntheduttha vaarthaigal moolam manathai varudi viddeergal. paaraatukal.

 4. லலிதா, திவ்யா, சக்திவேல்

  உங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.

  லலிதா உங்களுக்கு தனிமடல் இடுகிறேன்.

  அன்புடன்
  கீதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *