தலைக்கு மேல டண் டணா டண் டண்

உ) அனுபவம் எழுதுது

மனசுக்குள்ள உட்கார்ந்து மணி அடிக்கலாம் ஆனா தலைக்கு மேல டமாரம் அடிக்கலாமா?? அடிக்கிறாங்களே..

நாங்க வசிக்கும் குடியிருப்பின் மேல் மாடிக்கு புதுசா ஒரு குடும்பம் வந்திருக்காங்க. அவரு , அவர் காதலி, அந்தம்மாவோட குழந்தை. இவர் பையன் இரண்டு வாரத்துக்கு ஒருமுறை வந்து பார்த்துட்டு போவானாம். அதைப்பத்தியெல்லாம் கவலை இல்லிங்க.. என் பிரச்சனையெல்லாம் வீடே கடகடக்க அவங்க கேட்கிற சவுண்ண்ண்டு மியூசிக்தாங்க.

இங்க எல்லாமே மரத்துனால செஞ்சதுதான் வீட்டின் தளம் உட்பட, அதனால மாடியில யாராவது சந்தோஷத்துல துள்ளி குதிச்சாக்கா நம்ம இதயமும் துள்ளிக் குதிக்குது. போதாக்குறைக்கு குழந்தை தூங்க ஆரம்பிச்சிட்டா கேக்கவே வேண்டாம், நம்ம வீட்டுக்குள்ள ஊசி விழும் அமைதியை (Pin Drop Silence?) நான் கடை பிடிக்க மேல “டண் டணா டண் டண்ணு”ண்ணு ஆரம்பிச்சிருவாங்க. என் மண்டைக்குள்ளயும் வீட்டுக்குள்ளயும் எல்லாமே அதிர ஆரம்பிக்கும். எப்படித்தான் கஷ்டப்பட்டு காதை மூடிமூடி வச்சாலும் குழந்தையும் எழுந்து முழிச்சி முழிச்சி பார்க்கும் எங்கடா சத்தம் மட்டும்வருதேன்னு. இந்தக் கச்சேரி இராத்திரியும் நடக்கும் 11.30 மணியான சட்டுன்னு நிறுத்திருவாங்க.. (நம்ம மேல ரொம்ப கரிசனம்)

அப்படித்தான் ஒருநாள் மதியம் இந்த சவுண்ண்டு மியூசிக்குக்கு இடையே குழந்தையை தூங்க வச்சிட்டு யோசிச்சேன்.. என்னதான் செய்றது.. பேசாம வீட்டை காலி செய்துட்டு போயிரலாமன்னு யோசிக்கும்போதே என் அறிவு(?) என்னை இடித்துரைத்தது(?) பிரச்சனையைக் கண்டு ஏதும் தீர்வு யோசிக்காம இப்படி பயந்து ஓடினா எப்படி? அப்படின்னு. ம்ம் அதுவும் சரிதான். சரி என்ன செய்யலாம் மேனேஜ்மெண்டுக்கு ஒரு புகார் கொடுக்கலாமா.. இல்லை மேல் வீட்டுக்கு நேராவே போய் ஒரு குசலம் விசாரிச்சிட்டு அப்படியே அமுக்கி வாசிங்கனு சொல்லிட்டு வந்துரலாமா..ம்ம் இந்த இரண்டு யோசனையுமே எனக்கு கொஞ்சம் பயமா இருந்தது..

கொஞ்சம் நாள் முன்னாடி என் வீட்டுக்காரர் இங்க அமெரிக்காவுல நடந்த நிகழ்ச்சி ஒன்றை சொன்னார் அதாவது ஒரு மனுஷன் சுவருல(wall) ஆணி அடிச்சு ஓட்டை போட முடியலையின்னு தன்னோட துப்பாக்கி எடுத்து சுட்டு ஓட்டை போட்டிருக்கான் அவனோட போதாத காலம் அதுக்குப் பின்னாடி அவனோட மனைவி இருந்து இப்ப இறந்து போயிட்டாங்க…[செய்தி விபரம்] ஹ்ம். ஒவ்வொரு தடவை மேல் வீட்டுல ஆணி அடிக்கும் சத்தம் கேட்டாலே கொஞ்சம் உள்ளுக்குள்ள உதற ஆரம்பிச்சிருச்சி (அவரு கருப்ஸ் வேறயா கண்டிப்பா துப்பாக்கி வச்சிருப்பார் ஹ்ம்) இதுல நான் வேற புகார் கிகார் கொடுத்து “எந்த தையிரியம்..” அப்டின்னு சந்திரிமுகி ஸ்டைல்ல வந்துட்டார்னா.. அப்புறம் என் கதி.

அப்படியே யோசிச்சிட்டே திரும்பிப் பார்த்தேன் சன்னல் பக்கமா ரெண்டு உருவம் மாதிரி தெரிஞ்சது (அய்யோ யோசிச்சதுக்கேவா? ) உத்துப்பார்த்தா ரெண்டு ஸ்பானிஷ் ஆளுங்க ஒரு பெரிய பீரோ மாதிரியான ஒரு பெட்டியை எங்க வீட்டு பின்வாசல் முன்னாடி வச்சிருந்தாங்க. பார்க்குறதுக்கு ஒரு மேடை மாதிரியாவும் இருந்தது. மூளையில ஒரு மின்னல் இதேதூடா வம்பாப்போச்சு நம்ம வீட்டு பின்பக்கமே புல்வெளியில உட்கார்ந்து ‘டண் டணா டண்’ வாசிக்க போராங்களோ? அய்யகோ அப்படின்னு யோசிச்சிட்டே இருக்கும்போது ஒரு வழியா அதை அவங்க மேல் பால்கனிக்கு கயிறு கட்டி தூக்கிட்டாங்க. ஒரு வழியா சமாதானமானப்புறம்தான் ரொம்ப நேரமா மூச்சை விடவே இல்லைன்னு உரைச்சுது அவசரமா ரெண்டு ஸ்கூப் காற்றை ஸ்வாசிச்சேன்.

பின்குறிப்பு: போன வாரம் அந்தம்மாவிடம் என் வீட்டுக்காரர் கேட்டே கேட்டு விட்டார் ‘என்ன நீங்க மியூசீக் பிராக்டீஸ் செய்யறிங்ளா? ‘ன்னு..’ மியூசிக்கா நாங்களா சேச்சே’ என்று சிரிச்சாங்களாம். அதிலிருந்து அதிரும் சத்தம் வருவதில்லை. ஹி ஹி தெரிஞ்சுகிட்ட வரைக்கும் சந்தோஷம் தான்.

5 thoughts on “தலைக்கு மேல டண் டணா டண் டண்”

 1. உங்க எழுத்து நடை ரொம்ப நல்லாயிருக்குங்க. ஒவ்வொரு வரியும் வாசிக்கும்போது சிரிப்பாக இருந்தது. சின்னச் சின்ன அனுபவங்களையும் சுவாரசியமா எழுதுறதில சிலபேர்தான் தேர்ந்தவங்க. நீங்களும் நல்லா எழுதுறீங்க.

  //அவரு , அவர் காதலி, அந்தம்மாவோட குழந்தை.// இத வாசிக்கும்போது கல்யாணம் பண்ணிக்காமலே குழந்தை பெத்துக்கிட்டாஙகளோன்னு யோசிச்சிட்டேன். ஹீஹீ

  இப்போ உங்க குழந்தை எழும்பி முழிச்சுக்கிட்டு “எங்கயம்மா, அந்த சவுண்டு..எனக்கு சவுண்டு வேணும்ம்ம்ம்”ன்னு அழுவுறதில்லையா?

 2. நன்றிங்க சத்ய ப்ரியன்.

  நன்றிங்க மது.

  உங்களுக்கு பதிலெழுதும் இந்த நேரம்(11.35pm) மேல் வீட்டில saturday night பார்ட்டி நடக்குதுங்க. 🙂 என்ன செய்றது

  அன்புடன்
  கீதாஅ

 3. வணக்கங்க கடுகு,

  பிழைகளை திருத்திக்க முயற்சிக்கிறேங்க.

  நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *