மெய்யோ பொய்யோ
அழகிய செடியின் இலைகள்
நகம் தீண்டிய தழும்பேந்தி…
****************
நண்பர்களே,
நான் கண்ட ஒரு காட்சியையும்,அது என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தையும் வார்த்தைகளில் சிறைபிடிக்க நினைத்தேன்….
கையலம்பும் இடமருகில்
கண்கவர் செடியொன்று
மெய்யோ என்றறிந்திடவே
இலையொன்றை ஸ்பரிசித்தேன்
பாவம் அது….
பல்வேறு நகம் தீண்டி
உடல்முழுதும் தழும்புகளாய்..
இதை ஹைக்கூவாக எழுதவேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதியது மேலேயுள்ள மூன்று வரிக் கவிதை.
எப்படி இருக்கிறது? .. வேறு எப்படி எழுதலாம்? சொல்லுங்களேன்.
🙂
மிக மிக அருமை.தொட்டு விட்டு சென்றது என் மனதை………..
தழும்பேந்தின
செடியின் இலைகள்,
நகம் தீண்டியதால்…
இப்படி எழுதலாமோ:)
நன்றி குமரன், சேரன் குமார்
ரேவதி நரசிம்மன் அவர்களே உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி. 🙂
தழும்பேந்தி என்கிற வார்த்தை கடைசி வரியில் இடம்பெற்றால் மிக நன்றாக , ஒரு தாக்கத்தை கொடுக்கும் என்று கருதுகிறேன்…
நன்றி நண்பர்களே
அன்புடன்
கீதா
கடைசி வரி இல்லாவிடில் கவிதைக்கு வேறு ஓர் அர்த்தம் வரும்படி எழுதுவது பொதுவான ஹைக்கூ மரபு.
என்னுடைய முயற்சி.
இயற்கையானது போலவே
தோன்றும் அழகுச் செடி
இலைகளில் நகக் கீறல்கள்.
இது எப்படி இருக்கு? 🙂
பூவின் மொழி
மணமா! நிறமா!!
கீறிப்பார்க்கிறார் கவிஞர். 🙂
பூவின் மொழி
மணமா! நிறமா!!
நகக்கீறலில் தேடும்
கவிஞர்!!
அடுத்ததடுத்த வரிகள்ல எழுதிட்டேன். கவிதைதானே!! 🙂
உண்மைகள் மட்டும்
சோதனைக்குள்ளாவதில்லை.
பொய் இலைகள்.
உண்மைகள் மட்டும்
உறசிப்பார்க்கப்படுவதில்லை.
பொய் இலைகள்.
எனக்குள்ள இருக்குற கவிஞன் இரவு 1 மணிக்கு அப்புறம்தான் வெளில வருவான் போலருக்கு!! 🙂
வணக்கம் சதீஷ்,
ஹைக்கூ மரபு பற்றி சொன்னதுக்கு நன்றிங்க.
நீங்க எழுதின கவிதை ரொம்பவே நல்லா இருக்கு.. (ஆனா அது செயற்கையான செடிதான்னு சொல்லாம சொல்லியிருக்கிங்களே)
வணக்கம் சரவ்,
உங்களுக்குள்ள இருக்க கவிஞன் எழுதின ரெண்டாவது கவிதை ரொம்பவே நல்லா இருக்கு
பொய் இலைக’ளும்’னு எழுதினா இன்னும் நல்லா இருக்கும்.
அன்புடன்
கீதா
நகக்கீறலுடன்
புத்தம்புதுமலர்கள்
அமைதிச்சின்னம்
வாங்க மாதங்கி
நீங்க எழுதினதையே கொஞ்சம் மாத்திப் பார்த்தேன்.. எப்படி இருக்கு
அமைதியின் சின்னமாய்
புத்தம் புது மலர்கள்
நகக் கீறல்களுடன்
அன்புடன்
கீதா
இதய மலரை பறிக்கும்போது
இரத்தக்கரைகளாய் சிந்தியது
நகக்கீரல்களானது….
நேசம் பரப்பும்
மலர்க் கொத்தின்
இலைகளில் நகக் கீரல்.
Sorry..
நகக்கீறல்.
வாங்க சதீஷ்! நன்றி!!
அதிரைஅபு,
வருகைக்கு நன்றிங்க. இரத்தக்கரைகள்தான் நகக்கிறல்களானதா? எனக்குப் புரியலிங்க.
அறிவன்,
ரொம்ப அழகா இருக்குங்க.
நன்றி!!
அன்புடன்
கீதா
please try to look the marks as something ornaments like .
வணக்கம் முரளி
உங்களின் பார்வை வித்தியாசமாக உள்ளது.
நாம் கடவுளிடம் கொடுக்கும் நோய்,துன்பம்,துயரம்,கவலை, வருத்தம்.. இப்படிப்பட்டவைதான் அவர்களுக்கு ஆபரணங்களாக இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. அதேபோல் நாம் கொடுக்கும் தழும்பு, இந்த நகக்கிறல் செடிக்கு ஆபரணம் போல ம்ம்ம்
நாம் கொடுத்த துயரங்கள்
கடவுளுக்கு ஆபரணமானது
நம் நகக்கீறல் தழும்புகள்
இலைகளுக்கு ஆபரணமானது..
நல்லாயிருக்கா?
அன்புடன்
கீதா
இப்படி எழுதலாமோ?
அன்பு கடவுளுக்கு
நாம் பூட்டிய ஆபரணம்
துயரங்கள்
அழகு செடிக்கு
நாம் பூட்டிய ஆபரணம்
நகத்தழும்புகள்
வேற எப்படி எழுதலாம் சொல்லுங்களேன்?
இயற்கையா,
செயற்கையா,
அழகிய பூச்செடி?
திண்டவிழைகையில்
செயற்கையான ஆயிரம் தழும்புகளுடன்
இயற்கையாய் நிற்கிறது
-இளயுகன்
இது பொருத்தமாக இருக்குமா?
வாங்க இளயுகன்,
ரொம்ப நல்லாயிருக்கு…
அதையே கொஞ்சம் மாத்தி எழுதி பார்த்தேன்..
இயற்கையா?
செயற்கையா?
அழகிய பூச்செடி..
தீண்ட விழைகையில்
ஆயிரம் தழும்புகளுடன்
இயல்பாய் சிரிக்கிறது..
அன்புடன்
கீதா
very nice hickoo.
u really got the formula for hikoo.
keep it up.U hav very good VISUAL SENSE/
வணக்கம் பிரபுராஜ்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..