அழகுக்குட்டி நிவிம்மா..

அ) கவிதைகள்

பட்டு நிவி

ஏ நிலவே..
வேடிக்கை போதும்
என் செல்ல மகள்
இப்பொழுது தான்
கண்ணயர்ந்தாள்

முகிலிடை மூழ்கிடு..
நின் ஒளிக்கரங்களால்
வருடி வருடி
அவளின் துயில்
கலைத்து விடாதே

ஆசை மிகின்
தென்றலின் துணையொடு
அவ்வப்பொழுது
முகில் விலக்கி
அவள் தூங்கும் அழகை
இரசித்துக் கொண்டிரு
என்னைப் போல்..

10 thoughts on “அழகுக்குட்டி நிவிம்மா..”

  1. புன்னகை பூக்கும் புது மொழியாள்
    என்னுள்ளம் கொள்ளை போனதே
    நிலவும் உன்னை திருட -உன்
    உறங்கும் நேரம் பார்த்து
    ஓடி வந்ததா?
    நேற்று சொன்னதுதான்
    “நிலா நிலா ஓடி வா
    நில்லாமல் ஓடி வா”
    நின்று பேசத்தான் அழைத்தாள்
    உறங்கும் நேரத்தில்
    நித்திரை கொண்டவளை
    சத்தமிட்டு சண்டையிட அல்ல
    சற்றே பொறு
    சீக்கிரம் எழுவாள்
    தென்றலை கை கோர்த்து
    இன்றே சதிராடலாம்

  2. மாமனும் வந்துவிட்டான்
    மதியழகி கண்டாயா?
    மழலையவள் உறங்கட்டும்
    நாளைவந்து பார்ப்பாயா?

  3. நான உறங்கும் வேளையிலும்
    சில நேரம் நீ உறங்கும்பொழுது
    சின்ன விளையாட்டு காட்ட
    ஜன்னல் வழி வருவாளோ
    தூக்கத்தில் எழுந்து பார்த்தேன்
    இல்லை நிலாவும் உறங்குகிறது
    சற்றே நானும் துயில் கொள்கிறேன்!

  4. Valthukkal , Nivi Kuttyikku Chella Mutha, Unga Kavithigal Arumai, Enakkum kavithai varum sister, ana Yeppadi tamili yennuduyia blogil post pannuvathu yeppadinu thiriyalai. (subhayoga.tamilblogs.com)

Leave a Reply to தாய்மாமன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *