திருவள்ளூர் 4
திண்டுக்கல் 1
உத்திரபிரதேசம் 2
தர்மபுரி 1
நெல்லை 1
காட்டுமன்னார்கோயில் 1
முடிந்ததா? தொடருமா?
பிஞ்சு உயிரென்ன
துச்சமா உமக்கு
உம்வீட்டில் நிகழ்ந்தால்
உச்சுகொட்டி நிற்பீரா?
கெஞ்சமாட்டீர்
கதறமாட்டீர்
தடுப்பூசி மருந்தினை
தடைசெய்யமாட்டீர்
ஏன் தாமதம்??
போனது யாரோதானே
பிரியாவும் பூஜாவும்
உமக்கென்ன வேண்டும்?
அரசன் மகளென்ன
ஆண்டி மகளென்ன
உயிர் ஒன்றுதானே
பாசம் ஒன்றுதானே
வலி ஒன்றுதானே
புரியாதா உமக்கு?
தடுப்பூசி எதற்காக?
நோய் தடுக்கத்தானே?
ஊசியே உயிர் குடித்தால்
தவறெங்கே இருக்கிறது?
மருந்திலா? உடம்பிலா?
சல்லிசாய் வாங்கி
சும்மாய் கொடுத்தீர்
சுலபமாய்ப் போனது
பிஞ்சு உயிர்..
போதும் கொடுமைகள்
முற்றுப்புள்ளி வை
உயிர்களை மதி
நேர்மையாய் செயல்படு
மருந்தினை தடைசெய்
யாராயிருந்தாலும்
உயிர் ஒன்றுதான்
இன்று அவர்கள்
நாளை…
udanadi kothippu ullaththai thottathu. ellalavum marakka mudiyatha maranam. mannikka mudiyuma moonru latchangalal.
naan maru mozli ittal maranthu viukiren. enave mail seykiren.
வணக்கம் லலிதா,
உயிருக்கு விலை கொடுக்கவே முடியாது அதுவும் இதுபோன்ற இழப்புக்கு ஈடே இல்லை.. 3 லட்சமெல்லாம் எம்மாத்திரம்..
உங்களுக்கு தனிமடல் இடுகிறேன்.
அன்புடன்
கீதா
//தடுப்பூசி எதற்காக?
நோய் தடுக்கத்தானே?
ஊசியே உயிர் குடித்தால்
தவறெங்கே இருக்கிறது?//
//சல்லிசாய் வாங்கி
சும்மாய் கொடுத்தீர்
சுலபமாய்ப் போனது
பிஞ்சு உயிர்//
மருந்து வாங்குவதில்/கையால்வதில் நடந்த ஊழல் அவலத்திற்க்கு சரியான சாட்டையடி கேள்வி:)
வாழ்த்துக்கள்., வருந்துகிறேன் கவிதை சுட்டும் நிகழ்ச்சிக்கு:)
வாங்க ரசிகன்..
“திருந்தாத ஜன்மங்கள் இருந்தென்ன லாபம்…” அவங்களுக்கு கொள்ளை கொள்ளையா லாபம்.. நமக்குதானே நஷ்டம்…
என்ன சொல்றது போங்க… எப்பதான் இதுக்கெல்லாம் ஒரு முடிவு வருமோ??