கூகுளாண்டவனே சரணம் இண்டர்நெட்டே

அ) கவிதைகள்

கூகுளாண்டவனே சரணம் இண்டர்நெட்டே??

சமையல் குறிப்புக்கு சன்னதி நீ
சமயத்தில் பாதைக்கு வழிகாட்டி நீ
புரியாத வார்த்தைக்கு அகராதி நீ
தெரியாத விபரங்கள் தெரிவிப்பாய் நீ

அறியாத ஊருக்கு அட்லசும் நீ
படிக்காத பாஷைக்கு பண்டிதனும் நீ
தளங்களின் புள்ளியியல் நிபுணரும் நீ
மறுமொழி மயக்கத்தின் மாயமும் நீ

உலகிய நட்பினுக்கு வாசலும் நீ
வாசல்வெளி நட்புக்கு தாழ்ப்பாளும் நீ
காதலுக்கு தூதாகச் செல்பவனும் நீ
சாதலுக்கும் பலவழிகள் சொல்பவனும் நீ

அயல்நாட்டில் அன்னைமுகம் காட்டுபவன் நீ
அருகேயே இருப்போரை மறைப்பவனும் நீ
ஊருலக செய்தியெல்லாம் சொல்பவனும் நீ
உள்ளறையில் நிகழுவதை ஒளிப்பவனும் நீ

உலகினையே வீட்டுக்குள் விரித்தவனும் நீ
உனக்குள்ளே என்னுலகை முடக்கியதும் நீ

ஆண்டவன் புகழை அனைவரும் பாட வாரீர்!!!

7 thoughts on “கூகுளாண்டவனே சரணம் இண்டர்நெட்டே”

 1. வணக்கம் லலிதா
  தொடர் வருகைக்கு நன்றி 🙂

  வாங்க பிரேம்ஜி 🙂
  ஆண்டவன் புகழை பாடுங்க சும்மா சிரிச்சா எப்படி? 🙂

  அன்புடன்
  கீதா

 2. ஆண்டவனை தேடும் மனிதனுக்கு
  இன்று
  ஆண்டவனே தேடுதளமாய்

 3. வாங்க இளயுகன்..

  சுருக்கமா ரொம்ப அழகா எழுதி இருக்கிங்க.. 🙂

 4. நன்றி திகழ்மிளிர்.

  உங்க இயற்பெயர் இதுதானா? வித்யாசமா இருக்கு, அழகாவும் இருக்கு.

  அன்புடன்
  கீதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *