மலர்வளையம்

அ) கவிதைகள்

நினைவஞ்சலி
நினைவஞ்சலி

எப்படியோ நிகழ்ந்துவிடுகிறது
எதிர்பாராக் கொடுமைகள்
கண்ணெதிரே கண்டவுயிர்
கணப்பொழுதில் காலனோடு
விழியோரம் தொக்கிநிற்கும்
விழிநீரும் உணர்த்திச்செல்லும்
வேரினை பிடுங்கிச் சென்ற
வேதனை உரக்கச் சொல்லும்
வலிகொண்ட மனதிற்கு
மருந்தென்ன? மாற்றென்ன?
விழிமூடிக் கிடந்தாலும்
விட்டத்தை முறைத்தாலும்
வார்த்தைகள் விலகிநிற்கும்
வலியினை உணர்த்துதற்கு
வருடங்கள் உருண்டாலும்
வலியின் வாசம் மட்டும்
விழிக்கருவில் வடு போல
விலகாமல் என்றென்றும்..

5 thoughts on “மலர்வளையம்”

  1. ungal kavithai urakka vaasithu nanum oru murai avrgalin maranathukku malarvalayam vaithen. matoru maranam nikalathapadi ” iraivanukku oru venduthal” kavithai yeluthungalen sogothari.

  2. neengal yaarukaka ezthiyirunthalum anaivarukkum porunthum. senra varudam en mamiyaar , appa iruvaraiyum oru matha idaiveliyil pirintha thuyaram en ninaivil vanthathu.muthal varuda anjalikkaka iruvarukkum kavithanjali samarppithen. thamiz font try seykiren. kidaithathum en kavithaikalil sila varrai pakirnthu kolkiren.

  3. வணக்கம் சகோதரா

    நன்றி. அப்படி ஒரு கவிதையை ஏன் நீங்களே எழுதக்கூடாது.. எழுதி இங்கே இடுங்களேன்.. எதிர்பார்க்கிறேன்.

    அன்புடன்
    கீதா

  4. வணக்கம் லலிதா,

    பெரும்பாலும் நம்முடைய(மக்களுடைய) உணர்வுகள் ஒன்றி இருப்பதாலேயே, மற்றவர்களுடைய எழுத்தில் நம்மையும் இணைத்துக்கொள்ள முடிவதாலேயேதான் நம்மால் அவர்கள் படைப்பை இரசிக்க முடிகிறது இல்லையா?

    உங்கள் கவிதையை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்

    அன்புடன்
    கீதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *