பதின் வயது

அ) கவிதைகள்

இருட்டின் வெளிச்சத்தில்
தோன்றும் விண்மீனாய்
பதின் வயதுகளில்
பூப்பூக்கும் கனவுகள்
அழகான அலைகடலில்
ஆர்ப்பரிக்கும் பேரலையாய்
பருவச் சுரப்பி வசம்
அதிரடி ஆட்சிமாற்றம்
எதிர்பாராத் தாக்குதலால்
ஏதேதோ மாற்றங்கள்
அன்பான உறவுகளும்
அன்னியமாய்த் தெரிந்தன
அருகிருக்கும் எல்லோரும்
அறிவிலியாய்த் தோன்றினர்
அக்கறையின் அரவணைப்பும்
அணைக்கட்டாய் உறுத்தின
அறிவுரைகள் செவிகட்கே
அத்தியெனக் கசந்தன
புரிதலே இல்லையென்று
புலம்பிட வைத்தன
பெரிசுகள் தொல்லையென்று
போர்க்கொடி எழுப்பின
விரும்பின வாழ்க்கைத்தேடி
வெகுளியாய் உலகில் ஓடி
தாக்கின நிஜத்தின் வலியில்
தடைகளின் தடயம் புரிய..
அதைக் கடந்து போராடி
அனுபவத்தால் ஆளாக
நான் பட்ட இன்னல்கள்
நாள்தோறும் எனக்குச் சொல்லும்
பேருண்மை என்னவென்று
பெரியோர் சொல் வேதமென்று
………..
யான் பெற்ற துன்பங்கள்
நீ பெறவே வேண்டாமென்று
கற்று வந்த பாடங்களைக்
கனிவுடனே எடுத்துச் சொன்னால்
தலைமுறை இடைவெளியென
தள்ளியிருக்கச் சொன்னாய்
பதின் வயதென்றாலே
பட்டால்தான் புரியுமோ?

13 thoughts on “பதின் வயது”

 1. அறிவுரைகள் செவிகட்கே
  அத்தியெனக் கசந்தன
  புரிதலே இல்லையென்று
  புலம்பிட வைத்தன

  எல்லா வயதினருமே இப்படித்தானோ?

  யான் பெற்ற துன்பங்கள்
  நீ பெறவே வேண்டாமென்று
  கற்று வந்த பாடங்களைக்
  கனிவுடனே எடுத்துச் சொன்னால்
  தலைமுறை இடைவெளியென
  தள்ளியிருக்கச் சொன்னாய்
  பதின்ம வயதென்றாலே
  பட்டால்தான் புரியுமோ?

  இப்பொழுதெல்லாம் 10 வயது சிறுவர்கள் கூட நாம எதாவது சொன்னா அறுக்காத அப்படீங்கறாங்க. உலகம் வேகமா மாறி வருதோ?

  முகுந்தன்

 2. வணக்கம் முகுந்தன்

  இப்பொழுதெல்லாம் 10 வயது சிறுவர்கள் கூட நாம எதாவது சொன்னா அறுக்காத அப்படீங்கறாங்க. உலகம் வேகமா மாறி வருதோ?

  சின்னப்பசங்க ரொம்ப புத்திசாலிகளா/விவரமானவங்களா?? வளர்ந்துடறாங்க 🙂 வேறென்ன சொல்றது :):(

  அன்புடன்
  கீதா

 3. குழந்தைகளுக்கும் பெற்றோர்க்கும் இடையே உள்ள தலைமுறை இடைவெளியை அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள். செற்களும் ஒப்பனை இல்லாமலேயே வசிகரிக்கிறது. நல்ல கவிதை.

 4. சொற்களும் ஒப்பனை இல்லாமலேயே வசிகரிக்கிறது. நல்ல கவிதை

  மிக்க நன்றி சிவா 🙂

  அன்புடன்
  கீதா

 5. naan nalla thamizhil pinnoottam anuppa nainaithaal mudiyavillai.azhakiyil type adiththu copy pastepannaal varavillai.bloggil thamizhil adikka vazhi enna madam?
  arumaiyaana kavithi. i am reminded of my school ancd college days when i did not listen to my father. So i am not surprised that my children have contrary views.

 6. கீதா அவர்களுக்கு தங்களின் வெண்பா எழுதும் ஆற்றலை இயன்றவரையில் இனிய தமிழ் வலையின் மூலம் அறிந்தேன். எனது வெண்பா எழுதலாம் வாங்க வலைத்தளத்தில் ஈற்றடிக்கு வெண்பா எழுதும் விளையாட்டை நடத்திவருகிறேன். அதில் கலந்து கொள்ள தங்களை அழைக்கிறேன். நன்றி http://venbaaeluthalaamvaanga.blogspot.com/

 7. டீன் ஏஜ் பற்றி என்ன சொல்ல புரிஞ்சும் புரியாத வயசு ….அதுவும் இன்றைய சூழல்…
  நிறைய தூண்டில்கள் நடுவே நீந்திடும் மீன்கள் ….இல்லை தூண்டில் புழுக்களா ?
  நானும் ஒரு வலை பதிவு பண்ணிருக்கேன் பாருங்களேன்…
  http://valaikkulmazhai.wordpress.com
  கார்த்தி

 8. “virumbina vaalkai thedi..” this poem is eternal. The first poem which touched by heart is “nirpathuve nadapathuve by bharathi”. and yours is the secnd one. I have kept a link of your site in my blog “just4tamils.blogspot.com” (i am just an amateur in web designing. your website is looking simple and neat like your poems. If time permits,visit my site and give your advice)

 9. மிக அருமையான கவிதை. உங்கள் கவிதைகளை இங்கே பிரசுரிக்க அனுப்பலாமே?

  http://orukavithai.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *