பாதுகாப்போம் பிள்ளைகளை

அ) கவிதைகள்

child abuse-sexual_CI

பால்முகம் மாறும் முன்னே

பாலியல் தொந்தரவாம்.

பிஞ்சென்றும் அறிவாரோ

பிணந்தின்னியின் கீழோர்?

நெஞ்சல்ல நஞ்சுடையோர்,

நரம்பெங்கும் புரையுடையோர்,

வாய்ப்பொன்று வாய்த்திட்டால்

வெறியாடும் வாலினத்தோர்

நன்மகனாய் வேடமிட்டு

நயங்காட்டும் இழிமனத்தோர்.

சொந்தமாய் பந்தமாய்

சுற்றமாய்ச் சூழலாய்

எழிலாக ஒளிந்திருப்பர்

எங்கெங்கும் இவர் இருப்பர்.

வேலி போட வழியுமில்லை

வேலிதானா? தெரியவில்லை

சொல்வதற்கு ஏதுமில்லை

செய்வதற்கோ பஞ்சமில்லை

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

எக்கணமும் எச்சரிக்கை!!

பிஞ்சுதான் பரவாயில்லை,

வஞ்சமெது எடுத்துரைப்போம்!

தொடுதலெது தொல்லையெது

தொடரும்முன் தெரியவைப்போம்!

நயவர் எவர்? கயவர் எவர்?

நயமுடனே உள்-விதைப்போம்!

நன்மையெது தீமையெது

நாளுமதை ஊட்டிவைப்போம்!

பஞ்சுப் பொதி போன்ற

பட்டுத் தளிர் இவரை

கட்டித் தங்கமென

கவனமுடன் காத்திடுவோம்!!!

 

 

1 thought on “பாதுகாப்போம் பிள்ளைகளை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *