ஊருக்கு உபதேசம் சொல்வார்
உனக்கும் எனக்கும் இல்லை என்பார்.
மனிதனை மதி என்பார்,
மனிதத்தை மிதித்து நிற்பார்!
இருப்பவரெல்லாம் சமம் என்பார்
இணங்காதவரைப் பிணம் என்பார்!
பெண்ணுரிமை பேண் என்பார்
பிடிக்காதவளைத் தேள் என்பார்!
பிறர் தவற்றை ஓதிடுவார்
தன் பிழையைக் கருதமாட்டார்
மதிப்பில்லை எனச் சாடிடுவார்
அதைத் தரவும் வேணும்,
அதை தான் மறப்பார்!
பலவகை மனிதருள்
இவர்களும் ஒருவகை
இவர் அன்றும் இருந்தார்,
இனி என்றும் இருப்பார்!
yes true
these people will exist in all times of this earth