அதோ…
அந்தப் பூட்டாத அலமாரியில்தான்
ஒளிந்து கொண்டிருக்கின்றன
எனக்கே எனக்கான என் ரகசியங்கள்..
கதவின் இடுக்குகளில்
கைப்பிடியின் குழல்களில்
புடவை மடிப்புகளின் இடையினில்
அழுக்குத் துணிகளின் வாடையில்
ஆங்காங்கே எட்டிப் பார்த்தபடி
எனக்காய் காத்திருக்கின்றன.
கதவடைத்த கும்மிருட்டிலும்
கண்ணயர்ந்து உறங்காமல்
தொட்டுத் துழாவியபடி
என்னைத் தேடித் திரிகின்றன
வேறு எவரிடமும் மாட்டாமல்
எப்படியோ ஒளிந்து கொள்கின்றன..
தாய்முகம் தேடும் பிள்ளைபோல்
தவழ்ந்து தேய்கின்றன
பாவம் அவைகள்..
இதோ..
வந்துவிட்டேன்..
இரைச்சலான உலகினை மறந்து
ஏகாந்தத்தின் இனிமையில்
நான்
மற்றும் எனது ரகசியங்கள்.
yes everybody have their own secrets…
EVERYBODY HAS SECRETS