கார்ப்பரேட் பெருச்சாளியின்
கைப்பாவைதானே நாம்!
அன்று..
கரித்தூளைக் கைப்பற்றி,
பற்பசையைத் திணித்தார்கள்!
செக்கு நெய்யைச் சீரழித்து
சுத்தீகரித்துத் தந்தார்கள்!
வரகும் கம்பும் வீணென்று
வரட்டு ஓட்ஸ் கொடுத்தார்கள்!
கருப்பட்டியைக் கரையவிட்டு
கட்டிச் சர்க்கரை வளர்த்தார்கள்!
இன்று
காராம் பசுவைக் கண்டமாக்க
காளை காவு கேட்கிறார்கள்!
அடிமடியில் கைவைக்கும்
கார்ப்பரேட் கொழுப்பைத் தடுப்போமா?
அன்றி, அண்டை மாட்டினர் கடைவிரிக்க
காங்கேயம் காவு கொடுப்போமா?
let us stop this
conspiracy exisists even in JALLIKATTU… PEOPLE SAY