நான் வளர்கிறேனே அம்மா

அ) கவிதைகள்

தண்ணீரில் தொலைபேசி தரையெங்கும் காகிதங்கள் மங்கள நீராடியதில் மோட்சத்தில் மடிக்கணிணி பூசைக்கு படைக்கும் பொருள் முடியும்வரை இருப்பதில்லை தேடும் பொருள் கிடைப்பதில்லை போன இடம் தெரிவதில்லை நொடிப்பொழுது அசட்டைக்கு கைக்கூலி சேதாரம் அத்தனையும் புலம்பலல்ல இரசித்து சுவைத்து சிரித்தவைதான் கவிதை எழுத உட்கார்ந்தால் காலைக்கட்டி முகம்நோக்கி தளர் நடையில் கிளர் மொழியில் கொஞ்சிக் கெஞ்சி எனை அழைக்கும் கொள்ளை கொண்ட மகள் செயல்தான் சந்திப்போம் கீதா

Continue Reading

ஜன்னலுக்கு அப்பால்..

அ) கவிதைகள்

சீரிய காற்றடிக்க சருகென உதிர்ந்த இலைகள் ஜிவ்வென மேலெழும்பி சிறகுடைய பறவை ஆகி விண்ணிலே நிரம்பி நின்று புள்ளென பயணம் செய்ய… உதவிக்கு வந்த காற்றும் உயரத்தில் விட்டுச் செல்ல அசையாமல் நின்றன மரங்கள் மழையென பொழிந்தன இலைகள் கருத்தது மேகம் தானோ கடல் அதில் குடிபுகுந்தானோ வைரத்தின் வாள்தனை வீசி படைநடுங்க கோஷங்கள் பேசி கடலவன் இறங்கியே வந்தான் மழையென்னும் பெயரினைக் கொண்டான் இயற்கையின் ஜாலம் இதனை வெறுத்திடும் மனிதரும் உண்டோ உண்டெனக் கண்டன விழிகள் …

Continue Reading

பரீட்சை

அ) கவிதைகள்

படியென்று அன்னை சொல்கையிலே தேர்வு நாள் நெருங்கி வருகையிலே படித்தாயா என்று தோழி கேட்கையிலே எனக்கு படிக்கத் தோணலை இன்று தான் தேர்வு என்கையிலே தேர்வு மையத்தில் நுழைகையிலே பத்தே நிமிடங்கள் இருக்கையிலே பலவும் படிக்கத் தோன்றுதே பலநாள் படிக்காத பாடமெல்லாம் பத்தே நொடியில் படித்ததென்ன பத்தே நொடியில் படித்ததனை மணிக்கணக்காய் எழுதி தீர்த்ததென்ன படித்துத்தான் பார்ப்பாரோ – ஆசிரியர் பைத்தியம் தான் வாரோ? மதிப்பெண் தான் தருவாரோ? பாடத்தை மறந்துதான் போவாரோ?? 101202

Continue Reading

பிரிதல்

அ) கவிதைகள்

அஷ்டமியா? – ஆகாது தேய்பிறையா? – கூடாது இராப்பொழுதா? – வேண்டாமே எத்தனையோக் காரணங்கள் தேடித்தேடி எடுத்துவந்தேன் ஏதோ சரியில்லையென நித்தம் பயணம் ஒத்திவைத்தேன் உண்மையிங்கு அதுவல்ல நிஜத்தை நம் மனமறியும் எல்லாம் இருந்தபோதும் பயணிக்க மனம்தான் இல்லை

Continue Reading

நாய்ப்பொழப்பு

அ) கவிதைகள்

அலுக்காமல் படிகள் ஏறி அலுவலகக் கதவு தட்டி நயமாக கதைகள் சொல்லி நம்பியிதை வாங்கும் என்றால் வேலைகளை விட்டு விட்டு கதைமுழுதும் கேட்டபின்னர் கதவின் வழி காட்டிடுவர்.. இதுவேணும் பரவாயில்லை.. சரளமான ஆங்கிலத்தில் சடுதியிலே பேசக்கண்டு நடுக்கமுற்று இன்னும்சிலர் யாசகனைத் துரத்துதலாய் வாசலிலே நிற்கவைத்து வந்தவழி அனுப்பிடுவர் இதுவேணும் பரவாயில்லை வீதியிலே அலைந்ததாலோ? பேசிப் பேசித் திரிந்ததாலோ? கலக்கமுற்று இன்னும்சிலர் வாசலிலே எழுதிவைப்பர் “நாய்கள் ஜாக்கிரதை” & “சேல்ஸ்மேன் நாட் அலவுட்”

Continue Reading

மொபைல் மனிதர்கள்

அ) கவிதைகள்

ஓயவே மாட்டேனென்று நொடிக்கொரு முறை சினுங்கிக் கொள்ளு(ல்லு)ம் மொபைல் போன்கள்.. வெளி தேசத்திற்கும் அடுத்த வீட்டிற்கும் மேல் மாடிக்கும் சமயத்தில்.. அருகிருந்தும் அடையாளம் காணாதவர்க்கும் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாய் ஓயாத அழைப்புக்கள்.. ஆனாலும் நேரமில்லை வெகுநேரம் அருகமர்ந்து ஆவலுடன் காத்திருக்கும் குடும்பத்தினரிடம் பேசுதற்கு

Continue Reading

முதலெழுத்து..

அ) கவிதைகள்

கருவான நாள்முதல் கண்ணெனக் காத்தவள் உருவாக்கி என்னையும் உவகையோடு பார்த்தவள் வலிகளை மட்டுமே வாழ்நாளில் கண்டவள் இத்தனைப் பெருமையும் எந்தன் அன்னைக்கே முதலெழுத்து சூட்டுதற்கு தந்தை பெயர் மட்டும் கேட்பது ஏன்?

Continue Reading

அவரவர் உலகம்

அ) கவிதைகள்

உலகையே சுமப்பதுபோல் பையினைத் தலையில் சுமந்தபடி வீதிதோறும் உலவிக்கொண்டிருக்கும் விந்தையான ஒரு பெண்மணி.. வியாழக் கிழமை தோறும் விதிபோலத் தவறிடாமல் ‘முருகா’ என்று அழைத்தபடி யாசகம் கேட்கும் ஒரு தாத்தா.. ஒய்ந்த கால்களின் உதவியின்றி உடைந்து போன சக்கரங்களை கைகளின் உதவியில் ஓட்டியபடி ஓயாமல் பயணிக்கும் தாத்தா.. எங்கு போவர்? என்ன செய்வர்? இவர்களின் உலகத்தில் ஒரேநாள் சஞ்சரிக்க எனக்கும் ஆசைதான் ஆனாலும் தடுக்கிறது என் உலகம்..

Continue Reading

எறும்பு தத்துவம்

அ) கவிதைகள்

எறும்பு தத்துவம் பற்றி கேள்விப்பட்டிருக்கிங்களா? Ant Philosophy 1. Never Quit – Find a way or make it. 2. Think ahead – Ants think winter all summer 3. Think Positive – Ants think summer all winter 4. Do what all you can அதை உபயோகிச்சி ஒரு சின்ன கிறுக்கல்.. எறும்பு சொல்லும் பாடம் மேலேறி கீழிறங்கி முன்சென்று பின்சென்று ஏதோ ஒரு வழி …

Continue Reading

வெறுமை

அ) கவிதைகள்

ரம்யமான இசை.. பிடித்தமான பாடல்.. கவின் சொட்டும் காட்சி.. மனம் கவர்ந்த புத்தகம்.. கண்சிமிட்டும் விண்மீன்.. வருடிச் செல்லும் காற்று.. அசைந்தாடும் இலைகள்.. சுகமான உரையாடல்.. என்று ஏதேதோ .. மனதினுள் அடைத்தேன்.. ஆனாலும் மாற்றமில்லை இங்கு பெருகி நிற்பது.. என் வெறுமைதான்.

Continue Reading