தொடரும் தடுப்பூசி மரணங்கள்

அ) கவிதைகள்

திருவள்ளூர் 4 திண்டுக்கல் 1 உத்திரபிரதேசம் 2 தர்மபுரி 1 நெல்லை 1 காட்டுமன்னார்கோயில் 1 முடிந்ததா? தொடருமா? பிஞ்சு உயிரென்ன துச்சமா உமக்கு உம்வீட்டில் நிகழ்ந்தால் உச்சுகொட்டி நிற்பீரா? கெஞ்சமாட்டீர் கதறமாட்டீர் தடுப்பூசி மருந்தினை தடைசெய்யமாட்டீர் ஏன் தாமதம்?? போனது யாரோதானே பிரியாவும் பூஜாவும் உமக்கென்ன வேண்டும்? அரசன் மகளென்ன ஆண்டி மகளென்ன உயிர் ஒன்றுதானே பாசம் ஒன்றுதானே வலி ஒன்றுதானே புரியாதா உமக்கு? தடுப்பூசி எதற்காக? நோய் தடுக்கத்தானே? ஊசியே உயிர் குடித்தால் தவறெங்கே …

Continue Reading

கண்ணாமூச்சி..

அ) கவிதைகள்

நீ வழக்கமாக ஒளியுமிடம் தெரியாதா எனக்கு?? ஆனாலும்… வீடு முழுதும் தேடி அலைவேன்.. ‘த்த்தோ நிமி’ என்று தலைக்காட்டி நீ சிரிக்கும் அழகில் கரைய.. oOo சும்மாவேனும் கையில் முகம்புதைத்து அழுதுகொண்டிருப்பேன் ‘அம்மா’ என்றணைத்தபடி என் முகம்நோக்கும் உன் அழகுவிழிகளின் அன்பொளியில் நனைய..

Continue Reading

ஒரு தாயின் புலம்பல்..(உயிர்க்கொல்லியா தடுப்பூசி)

அ) கவிதைகள்

புள்ள உசுர காக்கத்தானே தடுப்பு ஊசி போட வந்தேன்.. உசுரையே கொன்னுப்போட்டா எங்க போயி முறையிடுவேன்.. பூவப்போல சிரிச்ச புள்ள துவண்டு மேல சரிஞ்சதய்யா.. மழலை பேசும் வாயிலெல்லாம் நுரை ததும்பி வழிந்ததய்யா.. தத்தித்தத்தி வந்த புள்ள தடம் புரண்டு கிடக்குதய்யா.. பெத்த மனம் தாங்கல்லியே சொல்லிச்சொல்லி மாளலியே என்ன சாக்கு சொல்லப்போற யார குத்தம் சொல்லப்போற எம் புள்ள எனக்கு வேணும் எப்ப திருப்பித் தரப்போற.. புகைப்படம் : நன்றி தினத்தந்தி

Continue Reading

அழகுக்குட்டி நிவிம்மா..

அ) கவிதைகள்

ஏ நிலவே.. வேடிக்கை போதும் என் செல்ல மகள் இப்பொழுது தான் கண்ணயர்ந்தாள் முகிலிடை மூழ்கிடு.. நின் ஒளிக்கரங்களால் வருடி வருடி அவளின் துயில் கலைத்து விடாதே ஆசை மிகின் தென்றலின் துணையொடு அவ்வப்பொழுது முகில் விலக்கி அவள் தூங்கும் அழகை இரசித்துக் கொண்டிரு என்னைப் போல்..

Continue Reading

எல்லோரும் இப்படித்தானா

அ) கவிதைகள்

மெய்யோ பொய்யோ அழகிய செடியின் இலைகள் நகம் தீண்டிய தழும்பேந்தி… **************** நண்பர்களே, நான் கண்ட ஒரு காட்சியையும்,அது என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தையும் வார்த்தைகளில் சிறைபிடிக்க நினைத்தேன்…. கையலம்பும் இடமருகில் கண்கவர் செடியொன்று மெய்யோ என்றறிந்திடவே இலையொன்றை ஸ்பரிசித்தேன் பாவம் அது…. பல்வேறு நகம் தீண்டி உடல்முழுதும் தழும்புகளாய்.. இதை ஹைக்கூவாக எழுதவேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதியது மேலேயுள்ள மூன்று வரிக் கவிதை. எப்படி இருக்கிறது? .. வேறு எப்படி எழுதலாம்? சொல்லுங்களேன்.

Continue Reading

உறங்கும் என் கவிதை

அ) கவிதைகள்

ஓயாத வேலை உன் பின்னே ஓட்டம் விளையாடும் நேரமெல்லாம் உன் வயதேதான் எனக்கும் காலை முதல் கனவு வரை ஏதேதோ எண்ணங்கள் குறிஞ்சியாய் பூக்கும் ஓரிரு கவிதைகளும் உயிர்பிக்க முடியாமல் ஓரத்தில் உறங்கிப்போகும் எங்கே தொலைந்துபோனேன்?? மீண்டும் கிடைப்பேனா?? எனக்கே எனக்கான நேரமும் கிடைக்குமா? இன்று கிடைத்தது நான் தேடும் என் நேரம் அப்பொழுதும்… உள்ளுக்குள் உறங்கும் கவிதையை எழுப்பாமல்.. வாய் குவித்து விரல் அசைத்து சிரித்து சிணுங்கி பதுமைபோல் உறங்கும் கவிதையான உன்னை இரசிக்கின்றேன் என்னவென்று …

Continue Reading

மாற்றம்

அ) கவிதைகள்

காலமகள் கொடியசைப்பில் கடந்தது பல ஆண்டு அன்பு நட்பு பாசம் கொண்டு கண்ட காட்சி கேட்ட சொற்கள் இன்றும் உண்டு நெஞ்சில் இங்கு அன்று கண்ட மக்கள் மட்டும் காணவில்லை மாறிப்போனார் காலச்சுழலில் வேறு ஆனார் மாற்றம் மட்டும் உண்மையென்றால் அன்பும்கூட பொய்மைதானோ? பழைய வாசம் தேடும் மனதே புரிந்துகொள்வாய் விழித்துக்கொள்வாய் வாழும் காலம் வேறு காலம்.

Continue Reading