அலுக்காமல் படிகள் ஏறி அலுவலகக் கதவு தட்டி நயமாக கதைகள் சொல்லி நம்பியிதை வாங்கும் என்றால் வேலைகளை விட்டு விட்டு கதைமுழுதும் கேட்டபின்னர் கதவின் வழி காட்டிடுவர்.. இதுவேணும் பரவாயில்லை.. சரளமான ஆங்கிலத்தில் சடுதியிலே பேசக்கண்டு நடுக்கமுற்று இன்னும்சிலர் யாசகனைத் துரத்துதலாய் வாசலிலே நிற்கவைத்து வந்தவழி அனுப்பிடுவர் இதுவேணும் பரவாயில்லை வீதியிலே அலைந்ததாலோ? பேசிப் பேசித் திரிந்ததாலோ? கலக்கமுற்று இன்னும்சிலர் வாசலிலே எழுதிவைப்பர் “நாய்கள் ஜாக்கிரதை” & “சேல்ஸ்மேன் நாட் அலவுட்”
மொபைல் மனிதர்கள்
ஓயவே மாட்டேனென்று நொடிக்கொரு முறை சினுங்கிக் கொள்ளு(ல்லு)ம் மொபைல் போன்கள்.. வெளி தேசத்திற்கும் அடுத்த வீட்டிற்கும் மேல் மாடிக்கும் சமயத்தில்.. அருகிருந்தும் அடையாளம் காணாதவர்க்கும் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாய் ஓயாத அழைப்புக்கள்.. ஆனாலும் நேரமில்லை வெகுநேரம் அருகமர்ந்து ஆவலுடன் காத்திருக்கும் குடும்பத்தினரிடம் பேசுதற்கு
முதலெழுத்து..
கருவான நாள்முதல் கண்ணெனக் காத்தவள் உருவாக்கி என்னையும் உவகையோடு பார்த்தவள் வலிகளை மட்டுமே வாழ்நாளில் கண்டவள் இத்தனைப் பெருமையும் எந்தன் அன்னைக்கே முதலெழுத்து சூட்டுதற்கு தந்தை பெயர் மட்டும் கேட்பது ஏன்?
அவரவர் உலகம்
உலகையே சுமப்பதுபோல் பையினைத் தலையில் சுமந்தபடி வீதிதோறும் உலவிக்கொண்டிருக்கும் விந்தையான ஒரு பெண்மணி.. வியாழக் கிழமை தோறும் விதிபோலத் தவறிடாமல் ‘முருகா’ என்று அழைத்தபடி யாசகம் கேட்கும் ஒரு தாத்தா.. ஒய்ந்த கால்களின் உதவியின்றி உடைந்து போன சக்கரங்களை கைகளின் உதவியில் ஓட்டியபடி ஓயாமல் பயணிக்கும் தாத்தா.. எங்கு போவர்? என்ன செய்வர்? இவர்களின் உலகத்தில் ஒரேநாள் சஞ்சரிக்க எனக்கும் ஆசைதான் ஆனாலும் தடுக்கிறது என் உலகம்..
எறும்பு தத்துவம்
எறும்பு தத்துவம் பற்றி கேள்விப்பட்டிருக்கிங்களா? Ant Philosophy 1. Never Quit – Find a way or make it. 2. Think ahead – Ants think winter all summer 3. Think Positive – Ants think summer all winter 4. Do what all you can அதை உபயோகிச்சி ஒரு சின்ன கிறுக்கல்.. எறும்பு சொல்லும் பாடம் மேலேறி கீழிறங்கி முன்சென்று பின்சென்று ஏதோ ஒரு வழி …
வெறுமை
ரம்யமான இசை.. பிடித்தமான பாடல்.. கவின் சொட்டும் காட்சி.. மனம் கவர்ந்த புத்தகம்.. கண்சிமிட்டும் விண்மீன்.. வருடிச் செல்லும் காற்று.. அசைந்தாடும் இலைகள்.. சுகமான உரையாடல்.. என்று ஏதேதோ .. மனதினுள் அடைத்தேன்.. ஆனாலும் மாற்றமில்லை இங்கு பெருகி நிற்பது.. என் வெறுமைதான்.
பத்துக் காசு
உச்சி வெயில் வேளையிலே செல்லும் சாலை மீதினிலே ஒளியொன்று எழக் கண்டு வியப்புடனே அங்கு சென்றேன் மின்னலின் ஒளி தோற்கும் மின்னிய பொருளைக் கண்டேன் அழகிய பத்துக் காசு சுடர்விடும் பத்துக் காசு யாரதை விட்டுச் சென்றார் யாரதை எடுத்துச் செல்வார் எடுத்திட மனமிருந்தும் ஏதேதோ தடுத்ததென்னை குனிந்ததை எடுத்திட்டால் குறும்பவர் கேலிசெய்வர் குனிந்ததை எடுக்கலாமா கோவிலில் சேர்க்கலாமா அருகினில் இரப்பவர்க்கு எடுத்ததை அளிக்கலாமா பலவிதம் எண்ணிக்கொண்டு பாதையைப் பார்த்த போது கடந்தே வந்துவிட்டேன் காசினைக் கண்ட …
கடலின் தாகம்..
பித்துப் பிடித்தன்ன போடி!! பிணம் வந்துக் குவிவது கண்டு திசை எட்டெங்கும் நீர் கண்டபோதும் எமன் தாகமடங்கலை போடி!!! பிஞ்சு உயிர்களைக் கொண்டான் பல வண்ணக் கனவுகள் கொன்றான் தாயின் கண்முன்னே சேயுயிர் தின்றான் இன்னும் என்னென்னவோ துயர் செய்தான் கடல் பொங்கின வேகம் கண்டாயோ? கரை தின்றதன் சோகம் கண்டாயோ? என்னென்று ஏதென்று சொல்வேன் மனம் பித்துப் பிடித்தது போடி
அமரக் காதல்
பொத்திவைத்த ஆசைகளை இரகசியமாய் திறந்துவைத்து உனக்கான என் அன்பை உதிராத பாசப் பூவை நமக்கு மட்டும் புரிந்திருக்கும் நயன பாஷைக் கவிதைகளை அழகாய்த் தேர்ந்தெடுத்து அற்புதமாய்க் கோர்த்துவைத்தேன் மடலினைக் கண்டுக் கண்டு நாளெல்லாம் இன்பமுற்றேன் உனக்கதை அனுப்பிட்டால் எத்தனை நீ இன்புறுவாய்.. விழிகளின் வார்த்தையன்றி வேறொன்றும் பேசிலோம் நாம் வாய்ச்சொற்கள் தேவையில்லை மனதினை மனம் அறியும் ஆனாலும்… சொல்லிடத் தோன்றவில்லை இதயங்கள் கிழிபடலாம்.. அதனால்.. சொல்லிட்ட திருப்தியுடன் மடலினை கிழித்துவிட்டேன் இனி.. இந்த பூமியுள்ளவரை இருவர் இதயங்களிலும் …
கோவம்
எங்கிருந்து வந்தனையோ எங்கு சென்றனையோ தவம் செய்யவில்லை நான் தானாக வந்தாய் நீ வழியனுப்பவில்லை நான் வந்தவழி சென்றாய் நீ வந்த சில நாழிகையில் என்வசத்தில் நானில்லை வசவுமொழி கேட்டனரோ வாயடைத்து நின்றனரோ? கடும்பார்வை கண்டனரோ கண் கலங்கிச் சென்றனரோ?? என்னை நீ ட்கொள்ள எங்கே நான் சென்றுவிட்டேன் என் சிரத்தில் நீயேற உன் அடிமை ஆனேனோ? என் உடமை நீயில்லை என்னை நீ விட்டுவிடு வாராமல் நீ இருந்தால் வாயில்ல பூச்சிதான் நான் ஆனால்.. வாழவேண்டும் …