கோக்

அ) கவிதைகள்

அனுதினமும் உறிஞ்சியதால் காலியானது நிலத்தடி நீர் [இதுவும் மீள் பதிவு..2 வருடம் முன்பு எழுதினது. அப்போ கோக்/தண்ணீர் பிரச்சனை ரொம்ப பெரிசா இருந்தது. என் கவிதைகள் சிலது அழிஞ்சிடுச்சிங்க.. நியாபகம் இருக்கிறதை மறுபடி போட்றேன்]

Continue Reading

தொடரும் தடுப்பூசி மரணங்கள்

அ) கவிதைகள்

திருவள்ளூர் 4 திண்டுக்கல் 1 உத்திரபிரதேசம் 2 தர்மபுரி 1 நெல்லை 1 காட்டுமன்னார்கோயில் 1 முடிந்ததா? தொடருமா? பிஞ்சு உயிரென்ன துச்சமா உமக்கு உம்வீட்டில் நிகழ்ந்தால் உச்சுகொட்டி நிற்பீரா? கெஞ்சமாட்டீர் கதறமாட்டீர் தடுப்பூசி மருந்தினை தடைசெய்யமாட்டீர் ஏன் தாமதம்?? போனது யாரோதானே பிரியாவும் பூஜாவும் உமக்கென்ன வேண்டும்? அரசன் மகளென்ன ஆண்டி மகளென்ன உயிர் ஒன்றுதானே பாசம் ஒன்றுதானே வலி ஒன்றுதானே புரியாதா உமக்கு? தடுப்பூசி எதற்காக? நோய் தடுக்கத்தானே? ஊசியே உயிர் குடித்தால் தவறெங்கே …

Continue Reading

ஒரு தாயின் புலம்பல்..(உயிர்க்கொல்லியா தடுப்பூசி)

அ) கவிதைகள்

புள்ள உசுர காக்கத்தானே தடுப்பு ஊசி போட வந்தேன்.. உசுரையே கொன்னுப்போட்டா எங்க போயி முறையிடுவேன்.. பூவப்போல சிரிச்ச புள்ள துவண்டு மேல சரிஞ்சதய்யா.. மழலை பேசும் வாயிலெல்லாம் நுரை ததும்பி வழிந்ததய்யா.. தத்தித்தத்தி வந்த புள்ள தடம் புரண்டு கிடக்குதய்யா.. பெத்த மனம் தாங்கல்லியே சொல்லிச்சொல்லி மாளலியே என்ன சாக்கு சொல்லப்போற யார குத்தம் சொல்லப்போற எம் புள்ள எனக்கு வேணும் எப்ப திருப்பித் தரப்போற.. புகைப்படம் : நன்றி தினத்தந்தி

Continue Reading

நாய்ப்பொழப்பு

அ) கவிதைகள்

அலுக்காமல் படிகள் ஏறி அலுவலகக் கதவு தட்டி நயமாக கதைகள் சொல்லி நம்பியிதை வாங்கும் என்றால் வேலைகளை விட்டு விட்டு கதைமுழுதும் கேட்டபின்னர் கதவின் வழி காட்டிடுவர்.. இதுவேணும் பரவாயில்லை.. சரளமான ஆங்கிலத்தில் சடுதியிலே பேசக்கண்டு நடுக்கமுற்று இன்னும்சிலர் யாசகனைத் துரத்துதலாய் வாசலிலே நிற்கவைத்து வந்தவழி அனுப்பிடுவர் இதுவேணும் பரவாயில்லை வீதியிலே அலைந்ததாலோ? பேசிப் பேசித் திரிந்ததாலோ? கலக்கமுற்று இன்னும்சிலர் வாசலிலே எழுதிவைப்பர் “நாய்கள் ஜாக்கிரதை” & “சேல்ஸ்மேன் நாட் அலவுட்”

Continue Reading

மொபைல் மனிதர்கள்

அ) கவிதைகள்

ஓயவே மாட்டேனென்று நொடிக்கொரு முறை சினுங்கிக் கொள்ளு(ல்லு)ம் மொபைல் போன்கள்.. வெளி தேசத்திற்கும் அடுத்த வீட்டிற்கும் மேல் மாடிக்கும் சமயத்தில்.. அருகிருந்தும் அடையாளம் காணாதவர்க்கும் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாய் ஓயாத அழைப்புக்கள்.. ஆனாலும் நேரமில்லை வெகுநேரம் அருகமர்ந்து ஆவலுடன் காத்திருக்கும் குடும்பத்தினரிடம் பேசுதற்கு

Continue Reading

முதலெழுத்து..

அ) கவிதைகள்

கருவான நாள்முதல் கண்ணெனக் காத்தவள் உருவாக்கி என்னையும் உவகையோடு பார்த்தவள் வலிகளை மட்டுமே வாழ்நாளில் கண்டவள் இத்தனைப் பெருமையும் எந்தன் அன்னைக்கே முதலெழுத்து சூட்டுதற்கு தந்தை பெயர் மட்டும் கேட்பது ஏன்?

Continue Reading

அவரவர் உலகம்

அ) கவிதைகள்

உலகையே சுமப்பதுபோல் பையினைத் தலையில் சுமந்தபடி வீதிதோறும் உலவிக்கொண்டிருக்கும் விந்தையான ஒரு பெண்மணி.. வியாழக் கிழமை தோறும் விதிபோலத் தவறிடாமல் ‘முருகா’ என்று அழைத்தபடி யாசகம் கேட்கும் ஒரு தாத்தா.. ஒய்ந்த கால்களின் உதவியின்றி உடைந்து போன சக்கரங்களை கைகளின் உதவியில் ஓட்டியபடி ஓயாமல் பயணிக்கும் தாத்தா.. எங்கு போவர்? என்ன செய்வர்? இவர்களின் உலகத்தில் ஒரேநாள் சஞ்சரிக்க எனக்கும் ஆசைதான் ஆனாலும் தடுக்கிறது என் உலகம்..

Continue Reading

மதம் (6.10.2003)

அ) கவிதைகள்

மதம் பிடித்த மனிதனுக்கு மனதின் வலியும் புரியுமோ? மகாத்மாக்கள் பெற்ற மண்ணில் மானுடம்தான் தோற்குமோ? வியர்வை மழையில் விளைந்த பயிரை குருதி வெள்ளம் அழிக்குமோ ஒற்றுமையில் உயர்ந்த மண்ணை வேற்றுமை நீர் அரிக்குமோ? புல்லுருவிகல் புகுந்து நம்முள் புதிய குழப்பம் விளைக்குமோ? ஒடுங்கிச் சென்ற பகைவர் கூட்டம் உரக்கச் சிரித்து மகிழுமோ? அன்னை மடியில் அமர்ந்து கொண்டே அவளுக்கிங்கு துரோகமோ? மகவிரண்டை மோதவிட்டே வாழ்வதுதான் மானமோ? இன்றும் நமக்கு ஓருயிர்தான் மாற்றம் ஏதும் நிகழ்ந்ததோ? உதிர வெள்ளம் …

Continue Reading

தினக்கூலி

அ) கவிதைகள்

பாலம் கட்டும் பணி.. இரும்புக் கால்களினூடே நிலைத்த மனிதக் கால்கள் இரண்டுக்கும் பேதமில்லை நின்றால்தான் வாழும் நலிந்தால் அழிந்துவிடும்..

Continue Reading