நினைவுச் சுரங்கம்

அ) கவிதைகள்

நட்பின் கையொப்பம் தாங்கிய விலை மதிப்பிலாத ரூபாய் நோட்டு பரிசென வந்து பாடம்செய்யப்பட்ட பூக்களின் காய்ந்த துணுக்குகள் வகுப்புநேரத் தூதனாய் ஆக்கப்பட்ட நினைவுகள் தாங்கிய ஆஜர்த்தாள் தளிர் கரத்தால் எழுதிக்கொடுத்த அக்கா மகளின் அழகுக்கிறுக்கல் வீதியிலே கண்டெடுத்த காகிதம் கசங்கியும் கம்பீரமாய் பாரதி அன்பாய் அண்ணன் அனுப்பிய சாக்லெட்டின் மிஞ்சிய போர்வை புத்தகம் அனுப்புமாறு வேண்டி ஆசிரியர் அனுப்பிய அஞ்சலட்டை நட்பிற்கு அனுப்பிய பரிசினை கொண்டுசேர்த்தமைக்கான இரசீது சுதந்திர தினம்தோறும் பிரியமாய் சேகரித்துவைத்த தேசியக்கொடிகள் தொலைத்துவிட்ட தோழி …

Continue Reading

அதிகாலை அதிசயம்

அ) கவிதைகள்

அடைமழை பொழிந்ததன் சுவடு அழகாய் தெரிந்தது இங்கு ஆங்காங்கே திட்டுத் திட்டாய் அதிசயத் தடாகம் பட்டாய் குருகுகளின் குளியல் அறையோ அவையெந்தன் விழிகட்கு இரையோ சொட்டிய துளிகளின் சப்தம் செவிகளை தீண்டிடும் சொர்கம் விழித்தது செங்கதிரோனோ விடியலின் அழகிதுதானோ தங்கமுலாம் பூசிய இலைகள் வெள்ளிமணி சொட்டிடும் கிளைகள் கோர்த்திடும் எண்ணம் கண்டு தீண்டினேன் விரல்கள் கொண்டு உருகின விரல்களின் வழியே சிதறின மணிகளும் தனியே விழிகளின் சொந்தம் அழகோ? விரல்பட அழிந்தே விடுமோ?

Continue Reading

தொலைந்த கனவு

அ) கவிதைகள்

விளையாட்டாய்க் கோவில் கட்டி வீடுதோரும் அறிக்கை ஒட்டி பொத்தி பொத்தி சேர்த்த காசில் பொங்க வைத்தோம் ஆண்டு தோரும் எனக்கென ஒரு கூட்டம் எதிரணியும் ஒரு கூட்டம் இருவேறு முகிற்குழாமாய் இடியுடனே வாழ்ந்துவந்தோம் ஏரியில் மீன் பிடித்து கேணியில் துளையவிட்டு உச்சி வெயில் காயும்நேரம் சூழ்ந்து நின்று ரசித்திருந்தோம் வாதாம் மரத்தில் ஏறி வாகாய் ஊஞ்சல் கட்டி கேளிக்கைப் போட்டிவைத்து கொட்டைகளைப் பரிசளித்தோம் கோவிலும் காணவில்லை பூசையும் நடப்பதில்லை மரமும் மாறிப்போச்சு மதிலும் வீடுமாச்சு தனியொரு முகிலாய் …

Continue Reading

மதம் (6.10.2003)

அ) கவிதைகள்

மதம் பிடித்த மனிதனுக்கு மனதின் வலியும் புரியுமோ? மகாத்மாக்கள் பெற்ற மண்ணில் மானுடம்தான் தோற்குமோ? வியர்வை மழையில் விளைந்த பயிரை குருதி வெள்ளம் அழிக்குமோ ஒற்றுமையில் உயர்ந்த மண்ணை வேற்றுமை நீர் அரிக்குமோ? புல்லுருவிகல் புகுந்து நம்முள் புதிய குழப்பம் விளைக்குமோ? ஒடுங்கிச் சென்ற பகைவர் கூட்டம் உரக்கச் சிரித்து மகிழுமோ? அன்னை மடியில் அமர்ந்து கொண்டே அவளுக்கிங்கு துரோகமோ? மகவிரண்டை மோதவிட்டே வாழ்வதுதான் மானமோ? இன்றும் நமக்கு ஓருயிர்தான் மாற்றம் ஏதும் நிகழ்ந்ததோ? உதிர வெள்ளம் …

Continue Reading

நட்பு (7.4.2003)

அ) கவிதைகள்

நட்பென்னும் பாதை தன்னில் நடக்கின்றேன் பல காதம் கடக்கின்ற வழி தோறும் பயில்கின்றேன் பல பாடம் என்னை நான் உணர்ந்த்துகொள்ள உதவியதென் நட்பேதான் என்னை நான் உணர்த்திச்செல்ல ஊக்கம் தரும் நட்பேதான் நட்பென்னை வளர்க்கையிலே நான் பிள்ளை கிப்போனேன் உருவத்தில் மட்டுமின்றி உள்ளத்தும் வளருகின்றேன் நண்பர் சிலர் வருவதுவும் வந்த சில மறைவதுவும் நான் கடக்கும் பாதைதன்னில் காலமும் கடந்து செல்ல.. நிழலுருவம் மறைந்தாலும் நினைவு என்றும் மாறாது நட்புடனே நான் நடக்க நண்பர் என்னைச் சூழ்ந்திருக்க …

Continue Reading

வட்ட அப்பம் (24.1.2003)

அ) கவிதைகள்

வட்டமான அப்பமொன்று வானில் மிதந்து போகுது எட்ட நின்று பார்ப்பதற்கே எச்சில் நாக்கில் ஊறுது எட்டி யாரும் எடுக்கும்முன்னர் எடுக்க மனசு துடிக்குது எட்டிப் பார்த்தும் முடியவில்லை ஏங்கி மனசு தவிக்குது நின்று நானும் பார்த்துவந்தேன் நித்தம் அளவு குறையுது இன்று பார்க்க வந்தபோது இல்லாமல் அது போனது எடுத்துச்சென்ற கள்வன் யாரோ ஏழை மனசு கலங்குது கண்டு வந்து சொல்வார் யாரோ கலங்கும் மனசு கேட்குது

Continue Reading

அர்த்தங்கள் (21/11/02)

அ) கவிதைகள்

அன்பெனக்கு நீ அளிக்க அதையே நான் உனக்களித்தால் அதிலென்ன ஆனந்தம் உண்டு நீ கொடுக்கா பொழுதினிலும் நானுனக்கு தொடர்ந்தளித்தால் அதுவே உண்மை அன்பென்பது நலமாக நீ இருந்து நலமா என்றென்னைக் கேட்டால் அதிலென்ன ஆறுதல் இருக்கிறது நலமற்று நீ இருந்தும் நினைவாக என் நலனைக் கேட்டால் அதுவன்றோ பிரியம் என்பது இறந்து நீ சென்றபின்பு உன் நினைவை பிறர் மறந்தால் அதிலென்ன பெருமை இருக்கிறது இறவாத உன் நினைவு பிறர் மனதில் வீற்றிருந்தால் அதுதானே வாழ்தல் என்பது.

Continue Reading

காதலிசம்..2 (5-12-02)

அ) கவிதைகள்

உன்னுடனே நான் பேச எனக்கிங்கே சில நிமிடம் ஒருநொடியில் பேசிவிட வார்த்தைகள் ஓராயிரமாம்.. தோழி எனை அழைப்பதற்கு இதுதான உகந்த நேரம் சில நொடிகள் பேசிடினும் மணிக்கணக்காய் தோன்றிடுதே.. ஓடாத கடிகாரம் ஓடுவதேன் இந்நேரம் சில நொடியும் பறந்துவிட சிறகுகள் தாம் தோன்றியதோ ஒரு நிமிடம் பேசிவிட்டேன் உன்னுடனே என்னவனே வாழும் என் உயிரிங்கு இன்னும் ஒரு வாரகாலம்

Continue Reading

காதலிசம்..1 (2-12-02)

அ) கவிதைகள்

பேசாத உன் விழியால் பேசுவது உன் இயல்போ? சொல்லாத வார்த்தைகளை சொல்வது உன் பார்வைதானோ? கேளாமல் என் இதயம் கேட்பதை நீ அறியாயோ? செல்லாமல் செல்வதென்ன என் உயிரும் உன்னோடு?

Continue Reading