இல்லை என்று சொல்லிவிட்டால் இந்த துன்பம் என்றுமில்லை இதோ என்று தந்துவிட்டு திரும்பக் கேட்டல் நியாயமாமோ? உந்தன் அன்பு என்னவென்று அறிந்திடாமல் நானிருந்தேன் அறிந்துகொள்ள வைத்துவிட்டு விலகிக்கொள்ளல் நியாயமாமோ? கண்ணிழந்து இருந்தபோது காட்சியாது அறிந்திடேன் நான் ஒளிகொடுத்து உணரவைத்து இன்று பிடுங்குவதேன் உயிரையும் சேர்த்து இல்லையென்றே இருந்திருந்தால் இந்த துன்பம் என்றுமில்லை பெற்றிழந்த வலியின் கொடுமை உனக்கு மட்டும் இல்லையா என்ன?
Tag: கவிதை
In My Daughter’s Eyes
ஒரு ஆங்கிலப் பாடல் இது. நண்பர் ஒருவர் பரிந்துரைத்து அனுப்பியது. எனக்கும் பிடித்தது. முடிந்தவரை பாடலை சிதைக்காமல் தமிழாக்கம் செய்தேன். இது ஒரு தாய்/தந்தை பாடும் பாடல்.. அவர் என்னவாக இருக்கவேண்டும் என்று கனவு கண்டாரோ..அதுவாகவே அவருடைய மகளின் பார்வைக்கு அவர் காட்சி அளிக்கிறார்.. என் மகளின் பார்வைதனில் என் மகளின் பார்வைதனில் நானென்றும் நாயகன்தான் நான் விரும்பும் நாயகனாய் என் வடிவம் அவள் விழியில் வலிமையுடன் திறமையுடன் பயம் மறந்த தன்மையுடன் என் மகளின் பார்வைதனில் …