ஜீவாவின் – வெண்பா வடிக்கலாம் வா

இ) வெண்பா முயற்சி

ஜீவாவின் வெண்பா ஆர்வத்தினால் விளைந்த பயன் இது.

ஒருவழியா வெண்பாவும் தட்டிட்டு வந்தேன்
இருவிழியால் ஒப்பிட்டு பாரு – பொருந்தி
வரவேண்டும் என்றே வணங்கியே நின்றேன்
அரங்கனே உன்தாள் சரண்

கடைசி வரி நான் மாத்திட்டேன்.. வெண்பவுக்கு இன்னொரு இலக்கணமும் இருக்கு அது என்னன்னா அடிதோரும் மோனை அமைஞ்சிருக்கணும். குறைஞ்சது இரண்டு சீருக்காவது சீர்மோனை அமைஞ்சிருக்கணும். அதுதான் சரி. (சரிதானே கொஞ்சம் விசாரிச்சு பாருங்க?? )

நான் எழுதியதில் அடிதோரும் சீர்மோனை அமைந்திருக்கிறது (மற்றதெல்லாம் நீங்க சரிபார்த்து வெண்பாவா இல்லை சும்மாவான்னு சொல்லுங்க 🙂 )

வெண்பாவும் – வந்தேன்
இருவிழியால் – ஒப்பிட்டு
வரவேண்டும் – வணங்கியே
அரங்கனே – உந்தாள்

எளிதான வெண்பா இலக்கணம்

மா முன் நிரை
விளம் முன் நேர்
காய் முன் நேர்

ஒருவழியா வெண்பாவும் தட்டிட்டு வந்தேன்
நிரைநிரைநேர் நேர்நேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர்
கருவிளங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமா

(காய்-ல முடியும் சீருக்கு அடுத்த சீர் நேரசையில ஆரம்பிக்கணும்)

இருவிழியால் ஒப்பிட்டு பாரு – பொருந்தி
நிரைநிரைநேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்
கருவிளங்காய் தேமாங்காய் தேமா புளிமா

(மா-ல முடியும் சீருக்கு அடுத்த சீர் நிரையில ஆரம்பிக்கணும்)

வரவேண்டும் என்றே வணங்கியே நின்றேன்
நிரைநேர்நேர் நேர்நேர் நிரைநிரை நேர்நேர்
புளிமாங்காய் தேமா கருவிளம் தேமா

(விளம்-ல முடியும் சீருக்கு அடுத்த சீர் நேர்ல ஆரம்பிக்கணும்)

அரங்கனே உன்தாள் சரண்
நிரைநிரை நேர்நேர் நிரை
கருவிளம் தேமா நிரை

அண்ணே எல்லாம் சரியா இல்லை சொதப்பிட்டனா.. ஏதோ நான் புரிஞ்சுகிட்டதை இங்க எழுதிட்டேன்.. தப்புன்னா சொல்லுங்க. திருத்திக்கிறேன்

அன்புடன்
கீதா

4 thoughts on “ஜீவாவின் – வெண்பா வடிக்கலாம் வா”

  1. அன்புடையீர், வணக்கம்.
    கவிதையில் மோனை என்பது,
    ஓர் அடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும்
    முதல் எழுத்து ஒத்த எழுத்தாய் இருக்க வேண்டும்.
    இரண்டாம், நான்காம் சீர்களில் அமைவது சிறப்புடைத்தன்று.
    ஒத்த எழுத்துகள் எனப்படுபவை-
    1. அ,ஆ,ஐ,ஔ
    2. இ,ஈ,எ,ஏ
    3. உ,ஊ.ஒ,ஓ
    எ-டு
    க-வுக்கு கா, கை, கௌ ஆகிய எழுத்துகளே மோனையாய் வரும்.
    கி-யுக்கு கீ, கெ, கே ஆகிய எழுத்துகளே மோனையாய் வரும்.
    கு-வுக்கு கூ, கொ, கோ ஆகிய எழுத்துகளே மோனையாய் வரும்.
    நீங்கள் எழுதியுள்ளதுபோல்,
    வெண்பாவும் – வந்தேன்
    இருவிழியால் – ஒப்பிட்டு
    அரங்கனே – உந்தாள்
    ஆகியவை மோனைகளாகக் கருதப்படா.

    மிக்க அன்புடன்,
    மு.சிவலிங்கம்.

  2. அன்புடையீர்,
    சிறு திருத்தம்-
    எ-டு
    க-வுக்கு க, கா, கை, கௌ ஆகிய எழுத்துகளே மோனையாய் வரும்.
    கி-யுக்கு கி, கீ, கெ, கே ஆகிய எழுத்துகளே மோனையாய் வரும்.
    கு-வுக்கு கு, கூ, கொ, கோ ஆகிய எழுத்துகளே மோனையாய் வரும்.

    மிக்க அன்புடன்,
    மு.சிவலிங்கம்.

  3. மிக்க நன்றி சிவலிங்கம் அவர்களே

    புரியவைத்தமைக்கு நன்றிகள் பல.

    இனி எழுதும்போது இந்த தவறு நேராமல் பார்த்துக்கொள்கிறேன்

    அன்புடன்
    கீதா

Leave a Reply to மு.சிவலிங்கம் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *