குழந்தைகள் காப்பகம்
விட்டுச்சென்றவர் வசிப்பது
முதியோர் இல்லம்
oOo oOo oOo oOo oOo oOo oOo
அன்று…
கதை கேட்ட உன்னிடம்
கார்டூன் பார் என்றேன்
விளையாட அழைத்தபொழுதோ
வீடியோ கேம் கொடுத்தேன்
தாலாட்டு பாடென்றாய்
டீ.வி பார்த்து துயிலென்றேன்
கட்டி அணைத்தபொழுதும்
கணினியில் மூழ்கிக்கிடந்தேன்
விழிகசியக் காத்திருந்தாய்
வேலையே கதியென்றிருந்தேன்
காலங்கள் உருண்டோடின
இன்று
உதவட்டுமா என்று கேட்டேன்
உனக்கொன்றும் தெரியாதென்றாய்
எப்பொழுது வருவாயென்றேன்
எரிதம் போல் என்னைப் பார்த்தாய்
ஏதேனும் பேசுவாயோ
என நானும் ஏங்கிப் பார்த்தேன்
இயலாத எனக்குத் துணையாய்
இயந்திரங்கள் விட்டுச் சென்றாய்…
நல்ல கவிதைகள் சகோதரி
அன்புள்ள கீதா
நீண்ட நாட்களுக்குப்
பிறகு உங்கள் எண்ணங்கள் கவிதை வாயிலாக அறிந்து மிகவும் மகிழ்ச்சி. குழந்தைகள் காப்பகம் கவிதை வரிகள் மனதை நெகிழ்த்தியது
அன்புடன் லலிதா
இரண்டாவது கவிதை சூப்பர்.