புள்ளிகள்

அ) கவிதைகள்

புள்ளிகள்

………………

புள்ளிகள்

தனித்திருக்கின்றன

என்றும் எப்பொழுதும்

இங்கும் அங்குமாய்

கோடுகள் இழுத்தும்

வளைத்தும் சுழித்தும்

வண்ணங்கள் தீட்டியும்

கோலமாய் இட்டும்

பரவிய புள்ளிகளை

பிணைத்து விட்டதாயும்

இணைத்து விட்டதாயும்

இறுமாந்து விடாதீர்கள்

இடியாப்பச் சிக்கலில்

இட்டு நிரப்பினாலும்

சூழலின் சூழலில்

சிக்கித் தவித்தாலும்

உள் அடங்கிய

ஊமைப் புள்ளிகள்

என்றும் என்றென்றும்

தனித்துத் தான்

நிற்கின்றன

3 thoughts on “புள்ளிகள்”

 1. நல்ல கவிதை நல்ல செய்தியுடன்
  (சரி என் இப்படி இவ்வளவு விதி முறைகள் கருத்திட நானும் படித்துவிட்டு போய் விடலாம் என்றே நினைத்திருந்தேன் ஆனால் உங்கள் கவிதைகள் என்னை கட்டி போட்டுவிட்டன உங்கள் ப்ளாகில் followers இல்லையே ஏன் எப்படி தொடர்வது உங்களை )

 2. Hi Poovizhi,

  Thanks for the comments. The comment moderation is on just because I am getting spam comments. Will do the needful about the followers.

  Thanks for stopping by

  Anbudan
  Geetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *