முன்பெல்லாம்.. என்னுள் தோன்றும் எனக்கான எண்ணங்களை வண்ணங்கள் சேர்த்து வார்த்தையில் கோர்த்து கவிதையாக்கி ரசித்திருப்பேன் இப்பொழுதெல்லாம்.. சொர்க்கத்தைக் கண்டாலும் சோர்வுற்று இருந்தாலும் பகிர்ந்து கொள்ள ஏதுவாய் உரிய பக்கம் தேடி “ஃபேஸ்புக்” மென்கடலில் நீந்திக் கொண்டிருக்கின்றேன் எங்கே எனது கவிதை?
Category: அ) கவிதைகள்
முற்பகல் செய்யின்..
குழந்தைகள் காப்பகம் விட்டுச்சென்றவர் வசிப்பது முதியோர் இல்லம் oOo oOo oOo oOo oOo oOo oOo அன்று… கதை கேட்ட உன்னிடம் கார்டூன் பார் என்றேன் விளையாட அழைத்தபொழுதோ வீடியோ கேம் கொடுத்தேன் தாலாட்டு பாடென்றாய் டீ.வி பார்த்து துயிலென்றேன் கட்டி அணைத்தபொழுதும் கணினியில் மூழ்கிக்கிடந்தேன் விழிகசியக் காத்திருந்தாய் வேலையே கதியென்றிருந்தேன் காலங்கள் உருண்டோடின இன்று உதவட்டுமா என்று கேட்டேன் உனக்கொன்றும் தெரியாதென்றாய் எப்பொழுது வருவாயென்றேன் எரிதம் போல் என்னைப் பார்த்தாய் ஏதேனும் பேசுவாயோ என …
நினைவாஞ்சலி
எனது அருமை அக்கா எப்படி முடிந்தது உன்னால் எமை விட்டுச் செல்ல எப்படி முடிந்தது உன்னால் தீபாவளித் திருநாள் இன்று தீபா வலியென்றே உணர்ந்தேன் அலைபேசி தனைக் கொண்டு அனைவர்க்கும் வாழ்த்துரைத்தேன் உன் எண்ணைக் கடக்குந்தோறும் உள்ளமெல்லாம் பதறுதம்மா… பொத்திப் பொத்தித் தாளாமல் பொங்கி வரும் சோகத்தை இத்தனை நாள் பேசாத என் கவிதை சொல்லிடுமா? மருதாணிச் சிவப்பை நீ மகிழ்ந்தெனக்குக் காட்டும்முன்னே காலன் கொண்டு சென்றானே காலம் பார்த்து வந்தானோ? நீ இல்லை எனும் நினைவே …
கனவு
இமைத்திரையில் மனம் ஓட்டும் வண்ணக் குறும்படம் கனவு
பதின் வயது
இருட்டின் வெளிச்சத்தில் தோன்றும் விண்மீனாய் பதின் வயதுகளில் பூப்பூக்கும் கனவுகள் அழகான அலைகடலில் ஆர்ப்பரிக்கும் பேரலையாய் பருவச் சுரப்பி வசம் அதிரடி ஆட்சிமாற்றம் எதிர்பாராத் தாக்குதலால் ஏதேதோ மாற்றங்கள் அன்பான உறவுகளும் அன்னியமாய்த் தெரிந்தன அருகிருக்கும் எல்லோரும் அறிவிலியாய்த் தோன்றினர் அக்கறையின் அரவணைப்பும் அணைக்கட்டாய் உறுத்தின அறிவுரைகள் செவிகட்கே அத்தியெனக் கசந்தன புரிதலே இல்லையென்று புலம்பிட வைத்தன பெரிசுகள் தொல்லையென்று போர்க்கொடி எழுப்பின விரும்பின வாழ்க்கைத்தேடி வெகுளியாய் உலகில் ஓடி தாக்கின நிஜத்தின் வலியில் தடைகளின் தடயம் …
அடுப்பங்கரை
சுள்ளி பொறுக்கி வெறகு வெட்டி தென்ன மட்டய காயவச்சி வெறக நல்லா பொளந்துவச்சி அடுப்பில் நுழைச்சி பத்தவச்சி எண்ணை ஊத்தி எரியவச்சி மண் சட்டிய ஏத்தி வச்சி ஊதி ஊதி இருமி இருமி வறட்டி புகைய விரட்டி விரட்டி கண்ணைக் கசக்கி வாயப்பொத்தி அல்லும் பகலும் அனலில் வெந்து அமுதமுதாய்ச் சமைச்சிடுவ.. ரேஷன் கடை வாசல் போயி காலு வலிக்க கியூவில் நின்னு மண்ணெண்ணை வாங்கி வந்து பம்ப்பு ஸ்டவ்வில் ஊத்தி ஊத்தி கையெல்லாம் வலிக்க வலிக்க …
மலர்வளையம்
நினைவஞ்சலி எப்படியோ நிகழ்ந்துவிடுகிறது எதிர்பாராக் கொடுமைகள் கண்ணெதிரே கண்டவுயிர் கணப்பொழுதில் காலனோடு விழியோரம் தொக்கிநிற்கும் விழிநீரும் உணர்த்திச்செல்லும் வேரினை பிடுங்கிச் சென்ற வேதனை உரக்கச் சொல்லும் வலிகொண்ட மனதிற்கு மருந்தென்ன? மாற்றென்ன? விழிமூடிக் கிடந்தாலும் விட்டத்தை முறைத்தாலும் வார்த்தைகள் விலகிநிற்கும் வலியினை உணர்த்துதற்கு வருடங்கள் உருண்டாலும் வலியின் வாசம் மட்டும் விழிக்கருவில் வடு போல விலகாமல் என்றென்றும்..
அருமை அம்மாவுக்கு..
தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். ****** என்ன எழுதுவதம்மா எதை எழுத நான் அம்மா என்றழைப்பதில்தான் எத்தனை சுகமெனக்கு.. உன் புடவைத் தலைப்புக்குள் ஒளிந்து கொண்டிருப்பேனே.. உன் மடிமீது தலைவைத்து உறங்கிப் போவேனே.. உன் கையால் சோறுண்ண நடுநிசியில் விழிப்பேனே.. வேலைக்கு நீ சென்றால்கூட வாசலிலேயே படுத்திருப்பேன் தெருமுனையில் உன்முகத்தை காணவேண்டித் தவமிருப்பேன்.. பண்டிகையோ விடுமுறையோ உனக்கெல்லாம் அடுப்படிதான் உனக்கெது பிடித்தாலூம் எனக்கு உண்ணத் தந்திடுவாய் எனக்கொரு நோயென்றால் ஊருக்கே தெரிந்துவிடும் உனக்கொரு நோயென்றால் …
கோக்
அனுதினமும் உறிஞ்சியதால் காலியானது நிலத்தடி நீர் [இதுவும் மீள் பதிவு..2 வருடம் முன்பு எழுதினது. அப்போ கோக்/தண்ணீர் பிரச்சனை ரொம்ப பெரிசா இருந்தது. என் கவிதைகள் சிலது அழிஞ்சிடுச்சிங்க.. நியாபகம் இருக்கிறதை மறுபடி போட்றேன்]
கூகுளாண்டவனே சரணம் இண்டர்நெட்டே
சமையல் குறிப்புக்கு சன்னதி நீ சமயத்தில் பாதைக்கு வழிகாட்டி நீ புரியாத வார்த்தைக்கு அகராதி நீ தெரியாத விபரங்கள் தெரிவிப்பாய் நீ அறியாத ஊருக்கு அட்லசும் நீ படிக்காத பாஷைக்கு பண்டிதனும் நீ தளங்களின் புள்ளியியல் நிபுணரும் நீ மறுமொழி மயக்கத்தின் மாயமும் நீ உலகிய நட்பினுக்கு வாசலும் நீ வாசல்வெளி நட்புக்கு தாழ்ப்பாளும் நீ காதலுக்கு தூதாகச் செல்பவனும் நீ சாதலுக்கும் பலவழிகள் சொல்பவனும் நீ அயல்நாட்டில் அன்னைமுகம் காட்டுபவன் நீ அருகேயே இருப்போரை மறைப்பவனும் …