உச்சி வெயில் வேளையிலே செல்லும் சாலை மீதினிலே ஒளியொன்று எழக் கண்டு வியப்புடனே அங்கு சென்றேன் மின்னலின் ஒளி தோற்கும் மின்னிய பொருளைக் கண்டேன் அழகிய பத்துக் காசு சுடர்விடும் பத்துக் காசு யாரதை விட்டுச் சென்றார் யாரதை எடுத்துச் செல்வார் எடுத்திட மனமிருந்தும் ஏதேதோ தடுத்ததென்னை குனிந்ததை எடுத்திட்டால் குறும்பவர் கேலிசெய்வர் குனிந்ததை எடுக்கலாமா கோவிலில் சேர்க்கலாமா அருகினில் இரப்பவர்க்கு எடுத்ததை அளிக்கலாமா பலவிதம் எண்ணிக்கொண்டு பாதையைப் பார்த்த போது கடந்தே வந்துவிட்டேன் காசினைக் கண்ட …
Category: அ) கவிதைகள்
கடலின் தாகம்..
பித்துப் பிடித்தன்ன போடி!! பிணம் வந்துக் குவிவது கண்டு திசை எட்டெங்கும் நீர் கண்டபோதும் எமன் தாகமடங்கலை போடி!!! பிஞ்சு உயிர்களைக் கொண்டான் பல வண்ணக் கனவுகள் கொன்றான் தாயின் கண்முன்னே சேயுயிர் தின்றான் இன்னும் என்னென்னவோ துயர் செய்தான் கடல் பொங்கின வேகம் கண்டாயோ? கரை தின்றதன் சோகம் கண்டாயோ? என்னென்று ஏதென்று சொல்வேன் மனம் பித்துப் பிடித்தது போடி
அமரக் காதல்
பொத்திவைத்த ஆசைகளை இரகசியமாய் திறந்துவைத்து உனக்கான என் அன்பை உதிராத பாசப் பூவை நமக்கு மட்டும் புரிந்திருக்கும் நயன பாஷைக் கவிதைகளை அழகாய்த் தேர்ந்தெடுத்து அற்புதமாய்க் கோர்த்துவைத்தேன் மடலினைக் கண்டுக் கண்டு நாளெல்லாம் இன்பமுற்றேன் உனக்கதை அனுப்பிட்டால் எத்தனை நீ இன்புறுவாய்.. விழிகளின் வார்த்தையன்றி வேறொன்றும் பேசிலோம் நாம் வாய்ச்சொற்கள் தேவையில்லை மனதினை மனம் அறியும் ஆனாலும்… சொல்லிடத் தோன்றவில்லை இதயங்கள் கிழிபடலாம்.. அதனால்.. சொல்லிட்ட திருப்தியுடன் மடலினை கிழித்துவிட்டேன் இனி.. இந்த பூமியுள்ளவரை இருவர் இதயங்களிலும் …
கோவம்
எங்கிருந்து வந்தனையோ எங்கு சென்றனையோ தவம் செய்யவில்லை நான் தானாக வந்தாய் நீ வழியனுப்பவில்லை நான் வந்தவழி சென்றாய் நீ வந்த சில நாழிகையில் என்வசத்தில் நானில்லை வசவுமொழி கேட்டனரோ வாயடைத்து நின்றனரோ? கடும்பார்வை கண்டனரோ கண் கலங்கிச் சென்றனரோ?? என்னை நீ ட்கொள்ள எங்கே நான் சென்றுவிட்டேன் என் சிரத்தில் நீயேற உன் அடிமை ஆனேனோ? என் உடமை நீயில்லை என்னை நீ விட்டுவிடு வாராமல் நீ இருந்தால் வாயில்ல பூச்சிதான் நான் ஆனால்.. வாழவேண்டும் …
நான் நீயில்லை
எனக்குத் தெரிந்தவை உனக்குத் தெரியாமலும் எனக்குப் புரிந்தவை உனக்குப் புரியாமலும் எனக்குப் பிடித்தவை உனக்குப் பிடிக்காமலும் எனக்கு நன்மையானவை உனக்குத் திமையாகவும் எனக்குக் கவிதையானவை உனக்குக் கிறுக்கலாகவும் எப்படியும் தெரியலாம்.. எல்லாமே சாத்தியம்தான். ஏனென்றால்.. எனக்கு ‘நான்’ எனத்தெரிவது உனக்கு ‘நீ’ எனத்திரிவதால்
கடல்
கத்தும் கடல் சத்தம் அது எட்டும் திசை எட்டும் நித்தம் அதன் மட்டம் தனில் யுத்தம் உயிர் யுத்தம் விண்ணும் ஒளிக் கண்ணும் அதில் மின்னும் அலை மின்னும் பொன்னோ இது பொன்னோ என எண்ணும் விழி எண்ணும் பாடும் கடல் ஆடும் அதில் ஓடம் ஜதி போடும் தேடும் வலை தேடும் அதில் வாடும் உயிர் ஓடும் கொல்லும் பகல் கொல்லும் அதை வெல்லும் கலம் வெல்லும் செல்லும் அது செல்லும் மரம் (பாய்மரம்) சொல்லும் …
பாலைவனச் சோலை
வீதியே வெந்திடும் வெப்பத் தணலில் ஓரமாய் பூத்திட்ட ஒற்றைச் செடியை நாடியே ஓடிடும் பட்டுக் குருகின் நாட்டியம் காண்கயில்.. அன்னையின் கைதனை அன்புடன் இறுக்கி அன்றலர்ந்த மலராய் இருவிழி விரிக்க தத்தையென தாவிடும் குழவியின் தளர் நடை காண்கயில்.. பல்வேறு கடமையும் கவலையும் சூழ தாவித் தாவித் தவித்துக் கொண்டு பாலையாய் போகும் முன்¨ர் நெஞ்சில் சோலை மலர்கிறது
தூவானம்
பொடிப் பொடியாய் விழும் சர்கரைத் தூரல் விழிவிரித்து பார்க்கயிலும் வந்தவழி காணல் ரோமத்தில் நீ மிதக்க கண்ணுக்குள் ஜில்லிப்பு நாவில் விழுந்தவுடன் நெஞ்சுக்குள் தித்திப்பு கையில் குடையிருந்தும் விரிக்க மனமில்லை நனைத்துதான் செல்லட்டுமே தடையாயிங்கு குடையுமில்லை
தொலைந்து போன(வர்கள்)வைகள்..1
என்றோ ஒருநாள் ஏதோவொரு காகிதத்தில் அவசரமாக கிறுக்கிவைத்த நண்பனின் தொலைபேசியெண் காணக்கிடைத்தது இன்று காலங்களை வென்று கண்ணீர் பரிசென தந்து.. தொலைபேசி இருக்கலாம் பேசியவன் தொலைந்துவிட்டான் காற்றினில் கலந்துவிட்டான் எண்களைச் சுழற்றுகின்றேன்.. எண்ணியது நடக்குமா? எடுத்து அவன் பேசுவானா? செவிகள் இன்னும் மறக்கவில்லை சென்றவனின் குரல் ஒலியை தொலைந்த அவன் உடலினைப்போல் அவன் குரலும் தொலைந்ததுவோ
மனதின் கதை..
கையில் கிடைக்காத மனதின் கதை கேட்டேன் கற்பனை ஆனாலும் கதையில் சுவையுண்டு பிரம்மன் படைத்திட்டான் புவியில் மனித இனம் மறைந்தே இருப்பதுதான் மனதின் பெருமையென்று தேடி அலைந்திட்டான் அவனின் மனதுக்கிடம் புவியில் புதைத்திட்டால் குடைந்தே எடுத்திடுவான் வெளியில் மறைத்திட்டால் பறந்தே பிடித்திடுவான் எவ்விதம் வைப்பதென யோசனை மிகக்கொண்டான் கண்டான் சிறந்த இடம் மனிதன் உடலே அ·து எங்கும் தேடும் மனிதன் தன்னுள் தேட மாட்டான் தேடத் துவங்கும் அந்நாள் வாழ்வின் அர்த்தம் புரியும் கதையும் முடிந்தது அங்கே …