மரணம் விழிப்பு மறுக்கப்பட்ட ஆழ்துயில் துக்கங்கள் தொடுவதில்லை தூக்கமும் கலைவதில்லை துடிக்க மறுத்த இதயத்தால் துடித்ததென்னவோ நாங்கள் தான் மரணம் மறுக்க இயலாத மலர்மாலை வேண்டிச் நின்றால் வருவதில்லை வந்தபின்னர் செல்வதில்லை தேடிச்சென்றால் பெருமையில்லை தேடிவந்தால் வரவேற்புமில்லை மரணம் சலனம் இல்லாத சாந்தநிலை இன்ப துன்பம் தெரிவதில்லை இழப்பும் உனக்கு புரிவதில்லை மண்ணில் வாழும் காலம் முடிய மனிதம் அற்றுபோகும் நிலை மரணம் மாற்ற முடியாத மாற்றுச் சட்டை மனித உடல் தேவையில்லை மண்ணில் இனி வாழ்வதற்கு …
Tag: கவிதை
திருட்டுகள் அம்பலம்
இருட்டுப் போர்வைக்குள் திருட்டுகள் பகல் வெளிச்சத்தில் அம்பலம் சிகரெட் துண்டுகள்
காலம்
வட்டத்தினுள் சதுரத்தை புகுத்திவிட நினைத்தேன் ஆனால் இன்று வட்டமே சதுரமாய் *** புத்தம் புது சில்லறையா சேர்த்து வச்சும் வீணாச்சே.. செல்லாக் காசு *** கல்மனசும் கரையுமின்னு கால் கடுக்க காத்திருந்தேன்.. கரைந்தது.. காலம்
படிக்கல்
மாணவனாய் இரு ஆசான் ஆவாய் ரசிகனாய் இரு கலைஞன் ஆவாய் வாசகனாய் இரு வாசிக்கப் படுவாய் மனிதனாய் இரு மகான் ஆவாய் அன்பாய் இரு உலகை ஆள்வாய்
..தினங்கள் தேவையில்லை
உள்ளத்துக் காதலை உணர்த்துவதற்கு காதலர் தினம் வரை காத்திருக்கத் தேவையில்லை தாய்மையின் பெருமையை போற்றுவதற்கு அன்னையர் தினம்தனை எதிர்நோக்கத் தேவையில்லை பெண்களின் மதிப்பை கொண்டாடுதற்கு மகளிர் தினம் வரை ஓய்ந்திருக்கத் தேவையில்லை ஒத்திவைத்தல் எதற்காக? ‘அடைக்குந்தாழ்’ எதற்காக? உள்ளத்து அன்போடும் உயர்வான பண்போடும் சீரிய கருத்தோடும் சிறந்த பணிவோடும் வாழ்ந்திருபோமேயானால் வாழும் நாளெல்லாம் அத்தகைய நாட்கள்தாம்
அம்மா..
உன் மடியில் உறங்கி நீ ஊட்ட உண்டு உன் வசவில் சிணுங்கி உடன் பிறப்போடலைந்து உனை ஏய்த்து மகிழ்ந்து சின்னவளாகவே இருந்திருந்தால்.. சுற்றங்களை விடுத்து மணமொன்று புரிந்து மறுதேசம் நுழைந்து நிதமும் உனைத்தேடி நினைவினில் நீராடி ஏங்காது இருந்திருப்பேன்.
தினக்கூலி
பாலம் கட்டும் பணி.. இரும்புக் கால்களினூடே நிலைத்த மனிதக் கால்கள் இரண்டுக்கும் பேதமில்லை நின்றால்தான் வாழும் நலிந்தால் அழிந்துவிடும்..
பார்வைகள்..
நீலம் பச்சையென்று நித்தமொரு நிறம் பூட்டி நீந்தவிட்டேன் வார்த்தைகளை உருவில் மாற்றமுண்டு உட்பொருளோ மாறவில்லை உள்ளம் உயர்ந்திருக்க ஊணுடம்பு தடையுமில்லை.. உட்பொருள் சரிசமமே உண்மையிதை உணர்ந்திடுவாய்
போதை அரக்கன்
அந்தோ எரிகிறதே அடிமனமும் பதறியதே பிஞ்சின் நிலையறிந்து பேதைமனம் துடிக்கிறதே பிஞ்சுகள் அறிந்திடாது தீதுயாது புரிந்திடாது நஞ்சினை கொடுத்தழிக்கும் வஞ்சகரை தெரிந்திடாது வந்தார் வாழவைப்போம் வினைகளினை தூரவைப்போம் பண்பாடு போற்றிடுவோம் சந்ததியைக் காத்திடுவோம் பிள்ளைகள் தேடிவரும் பெரும்பகையை நாமழிபோம்
மனதின் கதை
கையில் கிடைக்காத மனதின் கதை கேட்டேன் கற்பனை ஆனாலும் கதையில் சுவையுண்டு பிரம்மன் படைத்திட்டான் புவியில் மனித இனம் மறைந்தே இருப்பதுதான் மனதின் பெருமையென்று தேடி அலைந்திட்டான் அவனின் மனதுக்கிடம் புவியில் புதைத்திட்டால் குடைந்தே எடுத்திடுவான் வெளியில் மறைத்திட்டால் பறந்தே பிடித்திடுவான் எவ்விதம் வைப்பதென யோசனை மிகக்கொண்டான் கண்டான் சிறந்த இடம் மனிதன் உடலே அ·து எங்கும் தேடும் மனிதன் தன்னுள் தேட மாட்டான் தேடத் துவங்கும் அந்நாள் வாழ்வின் காரணம் புரியும் கதையும் முடிந்தது அங்கே …