அலாரம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அடிக்கும் முன்னே எழுந்து ஓடி
அரை இருளில் வழியைத் தேடி
பங்காளிகளின் கதவைத் தட்டி
படை சேர்த்துக் கிளம்பிடுவோம்
நடுநடுங்கும் விடியாப் பொழுதில்
நடுரோட்டில் போகிக் கொளுத்த.
வாரக்கணக்கா குப்பை சேர்த்து
வாசலிலே குவித்துப் போட்டு
வானளாவத் தீயத் தூண்டி
வாகாய் அதில் சூடு காட்டி
ஈர்க்குச்சியை எடுத்து வெட்டி
இருமுனையில் தாரை ஒட்டி
பதம் பார்த்து அடிக்கையிலே
பறையை மிஞ்சும் எங்கள் மேளம்!
அதிகாலைக் குளிரில் அங்கே
அனல் பறக்கும் போகிப் போட்டி!
அடுத்த வீட்டின் தீ உசந்தால்
அவசரமாய் பொருட்கள் கொட்டி
அதனை மிஞ்சிக் காட்டிடுவோம்
அதுதானே எங்கள் வீரம்!
அடி அடியென அடிக்கையிலே
அடிச்ச மேளம் கிழிஞ்சு போகும்
போகித் தீயில் அதையும் போட்டு
பொங்கிப் பொங்கிச் சிரிச்சிடுவோம்!
போகி போச்சு பொங்கல் வந்தது டும் டும் டும்டும்
போகி போச்சு பொங்கல் வந்தது டும் டும் டும்டும்
gradually these systems gradually vanish out
people are sensitive about environment…